under review

கணபதிதாசர்

From Tamil Wiki

கணபதிதாசர் (பொ.யு. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ்ப்புலவர். நெஞ்செறி விளக்கம் எனும் நூலை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கணபதிதாசர் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்ததாக கா.சுப்ரமணிய பிள்ளை கூறுவதற்கு ஆதாரங்களை அறிய முடியவில்லை.

இலக்கிய வாழ்க்கை

கணபதிதாசர் நெஞ்செறி விளக்கம் எனும் நூலை எழுதினார். இதில் நூறு செய்யுட்கள் உள்ளன. நாகை நாதர் எனும் சிவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடல்கள் பாடினார். இதில் நூறு விருத்தங்கள் உள்ளன.

பாடல் நடை

  • நெஞ்செறி விளக்கம்

தந்தைதாய் நிசமு மல்லச் சனங்களு நிசமு மல்ல
மைந்தரு நிசமு மல்ல மனையவ ணிசமு மல்ல
இந்தமெய் நிசமு மல்ல வில்லற நிசமு மல்ல
சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே

உசாத்துணை


✅Finalised Page