under review

கச்சபாலய தேவர்‌

From Tamil Wiki

கச்சபாலய தேவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். செய்யுட்கள், பொழிப்புரை, விரிவுகள் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

கச்சபாலய தேவர் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கச்சபாலய தேவர் பழநிவெண்பாமாலை என்ற நூலை எழுதினார். திருச்செய்ஞலூர் ஞானப்பிரகாச வள்ளலாரால் எழுதப்பட்ட 'வீரநாராயணர் விசயம்' என்னும் நூலுக்குப் பொழிப்புரையும் விரிவுரையும் வழங்கினார்.

நூல் பட்டியல்

  • பழநிவெண்பாமாலை
பொழிப்புரை
  • வீரநாராயணர் விசயம்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 11:12:27 IST