கங்காதரம்
From Tamil Wiki
கங்காதரம் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
கங்காதரம் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவரைப் பற்றிய பிற தகவல்கள் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
கங்காதரம் மஞ்சரி, மாலை ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
குமரேசர் மாலை
இது குமரேசனை விளித்துக் குறை வேண்டும் நிலையில் கண்ணி முறையில் அமைந்துள்ளது. இந்நூலில் சிவத்தியான கீர்த்தனம், துயரப்பத்து, நிவர்த்திப் பத்து முதலிய பகுதிகள் அமைந்த நூறு செய்யுட்கள் உள்ளன.
நூல் பட்டியல்
- அருட்பா மஞ்சரி
- குமரேசர் மாலை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Apr-2025, 18:21:14 IST