under review

எஸ். இன்னாசித்தம்பி

From Tamil Wiki

எஸ். இன்னாசித்தம்பி (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர். ஊசோன் பாலந்தை கதை என்ற ஈழநாட்டின் முதல் தமிழ் நாவலை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ். இன்னாசித்தம்பி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். திருகோணமலையில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

எஸ். இன்னாசித்தம்பி அந்தோணிக்குட்டி அண்ணாவியாரால் இயற்றப்பட்ட ’கிறித்து சமயக் கீர்த்தனை’ நூலை 1891-ல் ஆராய்ந்து பதிப்பித்தார். ஈழநாட்டின் முதல் தமிழ் நாவலை எழுதினார். இன்னாசித்தம்பி எழுதிய "ஊசோன் பாலந்தை கதை" நாவல் 1891-ல் வெளியானது. அச்சுவேலியைச் சார்ந்த எஸ். தம்பிமுத்துப்பிள்ளை இந்நாவலைப் பதிப்பித்தார். இதன் இரண்டாம் பதிப்பு, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரால் பரிசோதிக்கப்பட்டு 1924-ல் வெளியானது.

நூல் பட்டியல்

  • ஊசோன் பாலந்தை கதை
பதிப்பித்தவை
  • கிறித்து சமயக் கீர்த்தனை

உசாத்துணை


✅Finalised Page