under review

எம். கன்னியப்பன்

From Tamil Wiki
எம். கன்னியப்பன்

எம். கன்னியப்பன் (பிறப்பு: 1934) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார் (ஆசான்). ஐந்தாவது தலைமுறைக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

எம். கன்னியப்பன் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் பெருங்கட்டூரில் முத்துசாமிக்கு மகனாக 1934-ல் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை பயின்றார். அண்ணன் பொன்னுரங்கமும் கூத்துக் கலைஞர். பேரன் ராஜுவும் கூத்துக் கலைஞர்.

கலை வாழ்க்கை

எம். கன்னியப்பன் பதின்மூன்று வயதில் சித்தப்பா பொன்னுசாமியால் தெருக்கூத்தில் ஆர்வம் கொண்டார். வாத்தியார் பொன்னுசாமி. அனுமந்தண்டலம் இளநகர் கம்பெனி, பெருங்கட்டூர் பொன்னுசாமி தெருக்கூத்து மன்றம், நெடும்பறை கண்ணன் கம்பெனி, வேம்பாக்கம் கோபால் நாயக்கர் கம்பெனி, காஞ்சிபுரம் கட்டைக் கூத்து மன்றம் ஆகியவற்றில் கூத்து ஆடினார். பெருங்கட்டூர் பொன்னுசாமி தெருக்கூத்து மன்றத்தை நடத்தினார்.

மந்திரகுமாரி, மாயா மனோகரன், மயில் ராவணன் ஆகிய கூத்துக்களை கற்றுக் கொடுத்தார். வில்வளைப்பில் திரெளபதி, சுபத்திரை, மோகினி, விருதாசாரணி, பொன்னுருவி, கிருஷ்ணன், கட்டியங்காரன் ஆகிய வேடங்களில் நடித்தார். நெதர்லாந்து, ஹாலந்து ஆகிய நாடுகளிலும் கூத்து ஆடியுள்ளார்.

பங்கேற்ற கூத்துகள்

  • பரதக்கூத்துக்கள்
  • மந்திரகுமாரி
  • மாயா மனோகரன்
  • மயில் ராவணன்
  • நீலி
  • திருவிளையாடல்
  • தக்கயாகம்
  • வில்வளைப்பு

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Oct-2024, 18:15:10 IST