எம்.கே. கோபாலகிருஷ்ணன்
எம்.கே. கோபாலகிருஷ்ணன் (பிறப்பு: 1943) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், நாடகக் கலைஞர். தனிக்கூத்துகளும் ஆடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
எம்.கே. கோபாலகிருஷ்ணன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம். பாலுச்செட்டி சத்திரத்திலுள்ள முட்டவாக்கத்தில் 1943-ல் பிறந்தார். ஏழாம்வகுப்பு வரை படித்தார். தெருக்கூத்து இல்லாத காலத்தில் விவசாயம் பார்ப்பார்.
கலை வாழ்க்கை
எம்.கே. கோபாலகிருஷ்ணனின் வாத்தியார் பி. முனுசாமி, கங்காதரன், டி. தாண்டவராயன், எம்.ஆர். முனுசாமி. தந்தோணியம்மன் நாடக மன்றம், வெங்கடாசலபதி நாடக மன்றம் ஆகிய மண்ரங்களில் கூத்துகள் நடத்தினார். இருபத்தியிரண்டு வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1970 முதல் தெருக்கூத்துக்கு வந்தார். தனிக்கூத்துகளும் ஆடினார்.
வில்வளைப்பில் அர்ஜுனன், சுபத்திரை கல்யாணத்தில் கிருஷ்ணன், கர்ணமோட்சத்தில் கர்ணன், சயிந்தவ பங்கத்தில் சயிந்தவன் போன்ற முக்கிய வேடங்களிலேயே ஆடினார். ஆரம்பகாலகட்டத்தில் பெண் வேஷங்களில் ஆடினார். வட ஆற்காடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆந்திரா ஆகிய இடங்களில் கூத்துக்கள் ஆடினார்.
மாணவர்கள்
எம்.கே. கோபாலகிருஷ்ணனிடம் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் கூத்து கற்றனர். அவர்களில் எவரும் வாத்தியார்களாக இல்லை.
பங்கேற்ற கூத்துகள்
- வில் வளைப்பு
- சுபத்திரை கல்யாணம்
- திரெளபதி துகில்
- அர்ஜுனன் தபசு
- விராடபருவம்
- கர்ணமோட்சம்
- கீசகசம்மாரம்
- கிருஷ்ணன் தூது
- 18-ஆம் நாள் போர்
தனிக்கூத்து
- இரணியவிலாசம்
- புலயேந்திரன் தூது
- சயிந்தவ பங்கம்
நாடகம்
- ராமயணம்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Oct-2024, 18:18:36 IST