under review

எண்களின் சிறப்பு: எண் 8

From Tamil Wiki

எண்ணிக்கையைக் குறிப்பதற்கு எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எண் 8 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.

எண் 8-ன் சிறப்புகள்

ஒன்றிலிருந்து தொடங்கும் எண் வரிசையில் எட்டாவதாக வருவது 8. ’அஷ்ட’ என்றும் ‘அஷ்டம்’ என்றும் சம்ஸ்கிருதத்தில் அழைக்கப்படும். ’அட்டம்’ என்று தமிழ் இலக்கியங்களில் எண் 8 குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்மிக - இலக்கியச் சிறப்புகள்

  • அட்ட மா நாகம் - வாசுகி, அனந்தன்‌, விட்டபற்பன்‌, மகாபற்பன்‌, சங்கபாலன்‌, தக்கன்‌, கார்க்கோடகன், மாகுளிகன்‌.
  • அஷ்டதிக் பாலகர்கள் - இந்திரன்‌, அங்கி, யமன்‌, நிருதி, வருணன்‌, வாயு, குபேரன்‌, ஈசானன்‌.
  • எண் வகைத் தொடுகைகள் - ஒட்டுதல்‌, பிடித்தல்‌, தண்டல்‌, தடவுதல்‌, கட்டுதல்‌, வெட்டல்‌, குத்தல்‌, ஊன்றல்.
  • எண்‌ வகைக்‌ கணிதம் - சங்கலிதம்‌, விபகலிதம்‌, குணனம்‌, பாகாரம்‌, வர்க்கம்‌, வர்க்க மூலம்‌, கனம், கனமூலம்‌.
  • எண் வகைத் திருமணங்கள்‌ - பிரமம்‌, பிரசாபத்தியம்‌, ஆரிடம்‌, தெய்வம்‌, காந்தருவம்‌, ஆசுரம்‌, இராக்கதம்‌, பைசாசம்‌
  • எண்‌ வகை வெற்றிகள் - வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை.
  • அட்டமா சித்திகள் - அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம்‌, ஈசத்துவம்‌, வசித்துவம்‌
  • அஷ்ட மூர்த்தங்கள் - பார்‌, நீர்‌, தேயு, வாயு, ஆகாயம்‌, சூரியன்‌, சந்திரன்‌, இயமானன்
  • அட்டாங்க யோகம்‌ - இயமம்‌, நியமம்‌, ஆதனம்‌, பிராணாயாமம்‌, பிரத்தியாகாரம்‌, தாரணை, தியானம்‌, சமாதி
  • எண்வகைக்‌ காட்சிகள் - அறம்‌ ஐயப்படாமை, அவா ஒன்றின்மை, அறிவு உவர்ப்பின்மை, மூடம்றுத்தல்‌, அறப்பழி மறுத்தல்‌, அழிந்தோரை நிறுத்தல்‌, அறத்தை விளக்கல்‌, அறு சமயத்தோர்க்கு அன்பு.
  • எண்‌ குணம் - அனந்த ஞானம்‌, அனந்த தரிசனம்‌, அனந்த வீரியம்‌, அனந்த சுகம், நாமம்‌ இன்மை, கோத்திரம்‌ இன்மை, ஆயு இன்மை, அழியா இயல்பு
  • எண்‌ வகைக் குற்றம் - ஞானாவரிணியம்‌, தரிசனாவரிணியம்‌, வேதநீயம்‌, மோகநீயம்‌, ஆயு நாமம்‌, கோத்திர நாமம்‌, காய வந்தராயம்‌, வாயு வந்தராயம்‌
  • அட்ட மங்கலங்கள் - கவரி, நிறைகுடம்‌, கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்‌ கயல்‌,
  • அட்ட மலைகள் - இமயம்‌, மந்தரம்‌, கைலை, விந்தம்‌, நிடதம்‌, ஏமகூடம்‌, நீலம்‌, கந்தம்‌
  • எண்‌ வகை யானை - ஐராவதம்‌, புண்டரீகம்‌, வாமனம்‌, குமுதம்‌, அஞ்சனம்‌, புட்பதந்தம்‌, சார்வபூமம்‌, சுப்பிரதீபம்
  • அட்டகன் - விசுவாமித்திரனின் குமாரர்களில் ஒருவன்
  • அட்டாவதானம் - ஒரே சமயத்தில் எட்டு வேலைகள் செய்வது.
  • அட்டாவதானி - ஒரே சமயத்தில் வெவ்வேறு எட்டுத் திறமைகளைக் காட்டுபவர்
  • அட்டகோண மகரிஷி - கண்டுவ ரிஷியின் மகன்.
  • அட்டபந்தனம் - கோயில் மூலவர்களை நிலை நிறுத்தும் எட்டு பந்தனங்கள்- சுக்கான் கல், கொம்பரக்கு, எருமை வெண்ணெய், குங்கிலியம், சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, நற்காவி.
  • அட்டமச்சனி - ஜன்ம ராசிக்கு எட்டாவது ராசியில் நிற்கும் சனி கிரகம்.
  • அட்டமி - எட்டாவது நாள். ஏகாதசி, துவாதசி, தியோதசி, சதுர்த்தசி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி என்பது வரிசை.
  • அட்டலோக பற்பம் (அட்ட தாது) - எட்டு உலோகங்களின் பஸ்மம் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், தரா, வங்கம், துத்தநாகம்.
  • அட்ட வீரட்டம் - சிவன் போரிட்டு வென்ற எட்டுத்தலங்கள். கண்டியூர், கடவூர், அதிகை, வழுவூர், பறியலூர், கோவலூர், குறுக்கை, விற்குடி.
  • அட்டவக்கிரன் - உடலில் எட்டு கோணல்களையுடைய ஒரு முனிவர்
  • அட்ட வசுக்கள் - வசு எனும் தாய்க்கும் பிரமன் எனும் தகப்பனுக்கும் பிறந்தவர்கள்; அனலன், அணிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்யூஷன், பிரபாசன்.
  • அட்ட மங்கலம் – 1) எட்டு மங்கலப் பொருட்கள் - கண்ணாடி, நிறைகுடம், கொடி, சாமரம், அங்குசம், முரசு, விளக்கு, இணைக்கயல் (புராணம்)
  • அட்ட மங்கலம் – 2) கண்ணாடி, பூர்ண கும்பம், காளை, இரட்டை வெண் சாமரம், இலக்குமி உரு, சுவஸ்திகம், சங்கு, தீபம் (ஆகமம்)
  • அட்ட கணநாதர் - நந்தி, மகாகாளர், பிருங்கி, கணபதி, இடபம், கந்தர், பார்வதி, சண்டர்.
  • அட்ட கணபதிகள் - ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சத்தி கணபதி, வாலை கணபதி, உச்சிட்ட கணபதி, உக்ர கணபதி, மூல கணபதி.
  • அட்ட கர்மம் - வசியம், மோகனம், உச்சாடனம், தம்பனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷணம், மாரணம்.
  • அட்ட கல்யாணி - நான்கு கால்கள், முகம், தலை, வால், மார்பு இவை வெளுத்த குதிரை.
  • அட்ட கீட பேதம் - ஓணான், தவளை, காட்டு ஈ, வீட்டுப் பல்லி, காட்டு மசகம், மட்சிகம், மலைப் பீலிகம், சிலந்தி.
  • அட்ட குற்றம் - அந்தராயம், ஆயு, கோத்திரம், ஞானா வரணியம், தரிசனாவரணியம், நாமம், மோகநீயம், வேத நீயம்.
  • அட்ட குன்மம் - சூலை குன்மம், வாத குன்மம், பித்த குன்மம், சிலேத்தும குன்மம், எரிகுன்மம், சத்தி குன்மம், வன்னி குன்மம், சளி குன்மம்.
  • அட்ட சத்திகள் - 1) சயை, விசையை, சயந்தி, அபராசிதை, சித்தை, இரத்தை, அலம்புசை, உற்பலை
  • அட்ட சத்திகள் - 2) வாமை, சேஷ்டை, ரௌத்திரி, காளி, கலவிகரிணி, பலவிகரிணி, பலப் பிரமதனி, சர்வ பூத தமனி
  • அட்ட தயாவிருத்தி - பிறர் ஐயந் தீர்த்தல், தீமைக் கஞ்சல், பிறர் துயர்க்கிரங்கல், நன்மை கடைப்பிடித்தல், பிறர் கருமத்திற்கு உடன்படல், பிறர் கருமம் முடிக்க விரைதல், பிறர்க்குப் பொருள் வரவை உவத்தல், பிறர் செல்வம் பொறுத்தல்.
  • அட்ட தனம் - அழகு, குணம், ஆயுள், குலம், சம்பத்து, வித்தை, விவேகம், தனம்.
  • அட்ட திக்கு - எட்டுத் திசைகள்; கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.
  • அட்ட தேவ கணங்கள் - ஆதித்யர், வசுக்கள், ருத்ரர், விச்வதேவர், சாத்யர், மருத்துக்கள், பிருகு, அங்கிரர்.
  • அட்ட பாலகர் குறி - இடி, புகை, சீயம், யாளி, இடபம், கழுதை, யானை, காகம்.
  • அட்ட புஷ்பங்கள் - 1) சிவபூஜைக்கு எல்லாக் காலத்துக்கும் உரியவை – புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம் நீலோற்பலம் பாதிரி அலரி செந்தாமரை.
  • அட்ட புஷ்பங்கள் - 2) - காலை வேலைக்கு உரியவை - அலரி நாயுருவி மல்லிகை எருக்கு வில்வம் நந்தியாவர்த்தம் தாமரை பவளமல்லி.
  • அட்ட புஷ்பங்கள் - 3) உச்சிப்பொழுதுக்கு உரியவை - பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, வன்னி, கத்தரி, மந்தாரை, சரக்கொன்றை, தும்பை.
  • அட்ட புஷ்பங்கள் - 4) மாலை வேளைக்கு உரியவை – மல்லிகை, காட்டு மல்லிகை, மரமல்லிகை, மகிழம், கொன்றை, சண்பகம், சிறுசண்பகம், மருக்கொழுந்து.
  • அஷ்ட லட்சுமிகள் - ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி.
  • அஷ்ட வீணைகள் - ருத்ரவீணை, விசித்திர வீணை, நவசித்திரவீணை, மோகன வீணை, சாத்வீக வீணை, சரஸ்வதி வீணை, ஹம்ச வீணை, ஏகாந்த வீணை.
  • அட்ட போகம் - 1) பெண், நீராடல், ஆடை, அணிகலன், போசனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு.
  • அட்ட போகம் - 2) விக்கிரயம், தானம், அடகு, ஜலம், தரு, பாஷாணம், நிதி, நிக்ஷேயம்.
  • அட்ட போகம் - 3) அட்சிணி, ஆகாமி, ஜலாமிருதம், பாஷாணம், நிதி, நிக்ஷேபம், சித்தி சரத்தியம்.
  • அட்ட மகா ரோகங்கள் - வாத ரோகம், கல்லடைப்பு ரோகம், மகோதர ரோகம், குஷ்ட ரோகம், மேக ரோகம், பகந்தர ரோகம், மூலரோகம், கிரகணி ரோகம்.
  • அட்ட மாத்ருகைகள் - காமம் - யோகீச்வரி; குரோதம் - மாகேச்வரி; மதம் - பிரம்மாணி; லோபம் - வைஷ்ணவி; மோகம் - கௌமாரி; மாச்சர்யம் - இந்திராணி; அசூயை - வராகி; பிசுநம் - யமதண்டி.
  • அட்ட மாந்தம் - செரியா மாந்தம், போர் மாந்தம், மலடி மாந்தம், பெருமாந்தம், வாத மாந்தம், சுழி மாந்தம், வலி மாந்தம், கணமாந்தம்.
  • அட்ட மூலம் - சுக்கு, அரத்தை, செவ்வியம், சித்திர மூலம், கண்டு பரங்கி, கோரைக் கிழங்கு, நன்னாரி வேர், காஞ்சொறி வேர்.
  • அட்ட லோகி - எட்டு உலோகங்களில் பணி செய்யும் கம்மாளர்.
  • அட்ட வயிரவர் - 1) சுதந்திர வயிரவர், சுலேச்சால வயிரவர், உலோக வயிரவர், கால வயிரவர், உக்ர வயிரவர், பிரச்சையா வயிரவர், நின்மாண வயிரவர், பூஷண வயிரவர்.
  • அட்ட வயிரவர் - 2) சங்கார கால வயிரவர், அசிதாங்க வயிரவர், குரோத வயிரவர், சண்ட வயிரவர், உன்மத்த வயிரவர், கபால வயிரவர், விபீஷண வயிரவர், மார்த்தாண்ட வயிரவர்.
  • அஷ்ட சக்திகள் - ரௌத்திரி, ஷ்யாமளை, கௌமாரி, யக்ஞரூபிணி, மஹாலக்ஷ்மி, மனோன்மணி,. வைஷ்ணவி, மஹேஸ்வரி.
  • அஷ்ட சாஸ்தாக்கள் - கல்யாண வரத சாஸ்தா, ஸ்ரீ ஆதி பூதநாதர், ஸம்மோஹன சாஸ்தா, வேத சாஸ்தா, ஞான சாஸ்தா, பிரம்மசாஸ்தா, மகா சாஸ்தா, வீர சாஸ்தா.
  • அஷ்ட பிரபந்தம் - எண் வகைப் பிரபந்தங்கள் - திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்க நாயகர் ஊசல் திருநாமம், திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி
  • அட்ட வர்க்கம் - சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, பெருங்காயம், ஓமம்.
  • அட்ட வித பரீட்சை - நோயாளியைச் சோதித்தறிவது - நாடி, ஸ்பரிசம், ரூபம், சத்தம், நேத்திரக் குறி, மூத்திரக் குறி, நாவின் குறி, மலக்குறி.
  • அஷ்ட வக்கிர கீதை – அஷ்ட வக்கிர முனிவர் கூறிய கீதை
  • அட்ட ஊறு - சருச்சரை, சீர்மை, தண்மை, திண்மை, நொய்மை, மென்மை, வன்மை, வெம்மை.
  • அட்ட தச குணம் - பதினெட்டுக் குணங்கள்; பசி, தாகம், பயம், கோபம், சந்தோஷம், விருப்பம், நினைவு, உறக்கம், நரை, நோய், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், துன்பம், செயலின்மை.
  • அட்ட தசமூலம் - பதினெட்டு மூலங்கள்; கொடிவேலி, எருக்கு, நொச்சி, முருங்கை, மாவிலிங்கம், சங்கங்குப்பி, தழுதாழை, குமிழ், பாதிரி, வில்வம், கண்டங்கத்திரி, கறிமுள்ளி, சிற்றாமல்லி, பேராமல்லி, வேர்க்கொம்பு, கரந்தை, தூதுளை, நன்னாரி
  • அட்டாங்க யோகம் - எட்டு அங்க யோகம்.
  • அட்ட ஐஸ்வரியம் - இராசாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், அடிமை.
  • அட்ட திக் கஜங்கள் - எட்டுத் திக்கிலும் நின்று பூமியைத் தாங்கும் திசை யானைகள்.

உசாத்துணை


✅Finalised Page