under review

எண்களின் சிறப்பு: எண் 7

From Tamil Wiki

எண்ணிக்கையைக் குறிப்பதற்கு எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எண் 7 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.

எண் 7-ன் சிறப்புகள்

ஒன்றிலிருந்து தொடங்கும் எண் வரிசையில் ஏழாவதாக வருவது 7. ’சப்த’ என்றும் ‘சப்தம்’ என்றும் சம்ஸ்கிருதத்தில் அழைக்கப்படும். ’எழு’, ‘ஏழ்’ என்று தமிழ் இலக்கியங்களில் எண் 7 குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்மிக - இலக்கியச் சிறப்புகள்

  • எழு வகைத் தீவுகள் - நாவலந்‌ தீவு, இறலித்‌ தீவு, குசையின்‌ தீவு, கிரவுஞ்சத்‌ தீவு, சான்மலித்‌ தீவு, தெங்கின்‌ தீவு, புட்கரத்‌ தீவு.
  • மேலேழு உலகங்கள் - பூலோகம்‌, புவலோகம்‌, சுவலோகம்‌, மகலோகம்‌, சனலோகம்‌, தவலோகம்‌, சத்தியலோகம்‌.
  • கீழ் ஏழு உலகங்கள் - அதலம், விதலம், சுதலம், நிதலம், தராதலம், ரசாதலம், மகா தலம்‌.
  • ஏழு மலைகள் - இமயம்‌, மந்த்ரம்‌, கயிலை, விந்தியம்‌, நிடதம்‌, ஹேம கூடம்‌, நீலகிரி.
  • ஏழ் வகை நரகங்கள் - பெருங்களிற்று வட்டம்‌, பெருமணல்‌ வட்டம்‌, எரியின்‌ வட்டம்‌, புகையின்‌ வட்டம்‌, இருளின்‌ வட்டம்‌, பெருங்‌கீழ்‌ வட்டம்‌, அரிபடை வட்டம்‌.
  • ஏழு மாதர்கள் - பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி.
  • எழு வகைத்‌ தாதுக்கள் - ரத்தம்‌, உதிரம்‌, எலும்பு, தோல்‌, தசை, மூளை, சுக்கிலம்‌.
  • எழுவகை அகத்திணைகள் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை.
  • எழுவகை இசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.
  • எழுவகை சுரங்கள் - ச, ரி, க, ம, ப, த, நி
  • எழுவகைத் தாளங்கள் - துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம், ஏகதாளம்.
  • தலையேழு வள்ளல்கள் - சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்.
  • கடையெழு வள்ளல்கள் - அதியமான், ஆய், ஓரி, காரி, பாரி, பேகன், நல்லி.
  • இடையெழு வள்ளல்கள் - அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன், கர்ணன், சந்தன்.
  • எழுவகைப் பாதகங்கள் - ஆங்காரம், உலோபம், காமம், பகை, மிகையுணவு, காய்தல், சோம்பல்.
  • எழுவகைப் பிறப்பு - தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, நிற்பன.
  • எழுவகைப் பெண்டிரின் பருவங்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரளம்பெண்
  • எழுவகை மண்டலங்கள் - வாயு, வருணம், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்கினி, திரிசங்கு
  • ஏழு நாட்கள் (வாரத்திற்கு) - ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி.
  • வானவில்லின் ஏழு நிறங்கள் - ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.
  • ஏழு கண்டங்கள் – ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா, ஆஸ்திரேலியா
  • ஏழு சீர்களால் ஆனது - திருக்குறள்
  • மிகப்பெரிய ஓரிலக்கப் பகா எண் - ஏழு
  • ஏழுமலையான் என்று எண்ணின் பெயரால் அழைக்கப்படும் கடவுள் - திருமால்
  • ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது - ரோம்
  • ஏழு நாட்களில் இறைவன் உலகைப் படைத்ததாகக் கூறுவது – பைபிள்.
  • ஏழு புதிய உலக அதிசயங்கள் - சிச்சென் இட்சா, மீட்பரான கிறிஸ்து, சீனப் பெருஞ்சுவர், மச்சுபிச்சு, பெட்ரா, தாஜ்மகால், கொலோசியம்.
  • ஏழு வகைச் சக்கரங்கள் - மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம்.
  • சப்த சந்தானம் - எழுபதிச் சீர்த்தி
  • சப்த பதி - எழுபதிச் சடங்கு
  • சப்த ரிஷி மண்டலம் - ஏழு இருடிகளின் மண்டலம்; ஏழு ரிஷிகள் உள்ள உலகம்.
  • சப்த ரிஷிகள் – 1) மரீசி, அங்கிரசன், புலகன், வசிட்டன், அத்திரி, புலஸ்தியன், கிருதி.
  • சப்த ரிஷிகள் – 2) அகத்தியன், புலத்தியன், ஆங்கிரசு, கௌதமன், வசிட்டன், காசியபன், மார்க்கண்டன்
  • சப்த ரிஷிகள் – 3) காசியபன், அத்திரி, பரத்வாஜன், விசுவாமித்திரன், கௌதமன், ஜமதக்னி, வசிட்டன் (இவர்கள் குபேரனுடைய ஆசிரியர்கள்)
  • சப்த ரிஷிகள் – 4) அத்திரி, பிருகு, குச்சன், வசிட்டன், கௌதமன், காசியபன், ஆங்கிரச முனிவர்.
  • சப்த அங்கம் (சத்தாங்கம்) - அரசாட்சியின் ஏழு அங்கங்கள்; அரசு, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்.
  • சப்த வர்க்கம் - ஏழு வகை மருந்துகள்; நெல்லிக்காய், வெட்டிவேர், குருவேர், சடாமாஞ்சி, ஏலம், இலவங்கப் பத்திரி, திராட்சம்.
  • சப்த குலாசலம் - சப்த கிரி; ஏழு மலைகள்; மகேந்திரம், மலயம், சையம், சக்தி மந்தம், இருஷ பர்வதம், விந்தியம், பாரியாத்திரம்.
  • சப்த கோண ரிஷி - எழுவகைக் கோணல் உள்ள முனிவர்
  • சப்த கன்னிகள் - நளாயினி, பாஞ்சாலி, அகலிகை, குந்தி, தாரை மண்டோதரி, சீதை
  • சப்த கிரந்தி - மஹத், அகங்காரம், சத்தம், பரிசம், ரஸம், ரூபம், கந்தம்
  • சப்த தருப்பை - குசம், காசம், தூர்வை, விரீகி, மஞ்சம்புல், விச்வாமித்ரம், திருணம்
  • சப்த தாண்டவம் - சிவனின் ஆடல்கள்; ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளி தாண்டவம், முனிவர் பொருட்டு நடித்த தாண்டவம், சம்ஹார தாண்டவம்.
  • சப்த நரகங்கள் - 1) அள்ளல், இரௌரம், கும்பி பாகம், கூட சாலம், செந்துத் தானம், பூதி, மாபூதி.
  • சப்த நரகங்கள் -2) கூட சாலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து - பிங்கல நிகண்டு.
  • சப்த நரகங்கள் -3) பெருங்களிற்று வட்டம், பெருமணல் வட்டம், எரிபால் வட்டம், அரிபடை வட்டம், புகை வட்டம், பெருங்கீழ் வட்டம், இருள் வட்டம்.
  • சப்த நரகங்கள் - 4) இரத்தினப் பிரபை, சருக்கராப் பிரபை, வாலுகாப் பிரபை, பங்கப் பிரபை, தூமப் பிரபை, தமப் பிரபை, தமத்தமப் பிரபை.
  • சப்த தானியங்கள் - நெல், கொள், எள், உளுந்து, துவரை, கடுகு, பயிறு.
  • சப்த நாகங்கள் - தர்மன், காமன், காலன், வசு, வாசுகி, அநந்தன், கபிலன்.
  • சப்த பதி - திருமணச் சடங்கு. விவாக அக்னியை ஏழுமுறை சுற்றி வந்து மந்திரம் கூறும் சடங்கு.
  • சப்த மருந்து - ஏழு வான் மண்டலங்களில் உறையும் காற்று; ஆவகம், பிரவகம், சம்வகம், உத்வகம், விவகம், பரிவகம், பிராவகம் எனும் ஏழு வாயுக்கள் (விஷ்ணு புராணம்)
  • எழு நா - அக்னியின் ஏழு நாக்குகள்; காளி, கராளி, மனோசலை, சுலோகிதை, கதூம்பரவருணை, புலிங்கினி, விசுவ ரூபி.
  • எழுநிலை மாடம் - ஏழடுக்கு மாளிகை
  • எழுமான் - ஒருவகைப் பூண்டு
  • எழு வகை அளவை - நிறுத்தல், பெய்தல், சார்த்தல், நீட்டல், தெறித்தல், முகத்தல், எண்ணல்
  • ஏழ் பரியோன் – சூரியன்
  • ஏழிலைப் பாலை – மர வகையில் ஒன்று
  • எழுவகை மதம் – உடன்படல், மறுத்தல், பிறர் மதம் கேற்கொண்டு களைதல், தானொரு பொருளை எடுத்துக்காட்டி நிறுவுதல், இரண்டினுள் ஒன்றைத் துணிதல், பிறர் நூல் குற்றம் காட்டல், பிறர் மதத்துக்கு உடன்படாமல் தன் மதம் கொளல்.
  • எழு மதம் – ஆண் யானைக்குப் பிடிக்கும் ஏழு வகை மத நீர்.
  • ஏழகம் – ஆடு
  • ஏழாங்காப்பு – குழந்தை பிறந்த ஏழாம் நாளில் அணியும் காப்பு.
  • ஏழாங்கல் – சிறுமிகள் வீட்டிலிருந்து விளையாடும் விளையாட்டு.
  • ஏழாங்கால் – திருமணத்துக்கு ஏழு நாட்கள் முன்பு நடும் பந்தக்கால்.

உசாத்துணை


✅Finalised Page