under review

எண்களின் சிறப்பு: எண் 6

From Tamil Wiki

எண்ணிக்கையைக் குறிப்பதற்கு எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எண் 6 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.

எண் 6-ன் சிறப்புகள்

ஒன்றிலிருந்து தொடங்கும் எண் வரிசையில் ஆறாவதாக வருவது 6. ’ஷஷ்டி’ என்று சம்ஸ்கிருத்தில் அழைக்கப்படும். ஆறு என்ற சொல்லுக்கு எண், நதி, ஆறுதல் கொள்ளுதல், வழி, ஒழுக்கம், சூட்டைக் குறைத்தல் எனப் பல பொருள்கள் உண்டு.

ஆன்மிக - இலக்கியச் சிறப்புகள்

  • அறுசுவை - இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு
  • அறுவகை ஆதாரங்கள் - மூலம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை
  • அறுவகை உட்பகைகள் - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம்
  • அறுவகைத் தானைகள் - வேல்‌ தானை, வாள்‌ தானை, வில்‌ தானை, தேர்த்‌ தானை, பரித்‌ தானை, களிற்றுத்‌ தானை
  • அறுவகைச் சாத்திரங்கள் - வேதாந்தம், வைசேஷிகம், பாட்டம், பிரபாகரம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை
  • அறுவகைச் சிறுபொழுதுகள் - மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு
  • அறுவகை பெரும்பொழுதுகள் - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
  • அறுவகை அரசரின் அங்கங்கள் - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்
  • அறுவகை உலக நடை - அற நிலை அறம்‌, மற நிலை அறம்‌, அற நிலைப்‌ பொருள்‌, மற நிலைப்‌ பொருள், அற நிலை இன்பம்‌, மற நிலை இன்பம்‌.
  • அறுவகைச்‌ சக்கரவர்த்திகள் -‌ அரிச்சந்திரன்‌, நளன்‌, முசுகுந்தன்‌, புரூரவன், சகரன்‌, கார்த்தவீரியன்‌
  • அறுதொழில்கள் - உழவு, தொழில், வரைவு, வாணிகம்‌, விச்சை, சிற்பம்‌
  • நல்‌ நாட்டு அமைதி அறுவகைகள் - செல்வம்‌, விளைவு, பல்‌வகை வளம்‌, செங்கோன்மை, குறும்பு இன்மை, கொடும்‌ பிணி இன்மை
  • அறுவகை ஆடுகள் - காராடு, செம்மறியாடு, கம்பளியாடு, மலையாடு, துருவாடு, பள்ளையாடு
  • அரசரின் அறு தொழில்கள் - ஓதல்‌, வேட்டல்‌, பார்‌ புரத்தல்‌, ஈதல்‌, படைக்கலம்‌ கற்றல்‌, விஜயம்‌.
  • அந்தணரின் ஆறு தொழில்கள் - ஓதல்‌, ஓதுவித்தல்‌, வேட்டல்‌, வேட்பித்தல்‌, ஈதல்‌, ஏற்றல்‌
  • வணிகர்களின்‌ ஆறு தொழில்கள் - ஓதல்‌, வேட்டல்‌, ஈதல்‌, உழவு, பசுக்‌காவல்‌, வாணிகம்‌
  • வேளாளரின் ஆறு தொழில்கள் - உழவு, பசுக்‌ காவல்‌, வாணிபம்‌, குயிலுவம்‌, காருக வினை, ஏவல் செய்தல்
  • ஆறு அங்கங்கள் - மந்திரம்‌, வியாகரணம்‌, நிகண்டு, சந்தோபிசிதி, நிருத்தம்‌, சோதிடம்‌.
  • ஆறு சமயங்கள் - வைசேடிகம்‌, நையாயிகம்‌, மீமாம்சை, ஆருகதம்‌, பெளத்தம்‌, பிரதி லோகாயதம்‌
  • அறுமுகனம் – தோல்கருவி வாத்தியங்களில் ஒன்று
  • அறுவகை நிலை - வைணவம், சமநிலை, வைசாகம், மண்டலம், ஆவீடம், பிரத்யாவீடம்
  • அறுபடை - மூலப்படை, கூலிப்படை, நாட்டுப் படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை.
  • அறுமுறை வாழ்த்து - முனிவர், பார்ப்பார், ஆநிரை, மழை, அறுமுகன், முடியுடை வேந்தர், உலகு என ஆறினையும் கூறும் வாழ்த்து.
  • அறுபடை வீடு - முருகனின் ஆறு படைவீடுகள்.
  • ஆறுமுகம் - ஆறுமுகங்கள் கொண்ட இறைவன்; ஆறு முகத்துடன் இருந்த சிவனின் நெற்றி விழிகள் ஆறிலும் இருந்து சிதறிய பொறிகளில் உருவான, கார்த்திகைப் பெண்டிர் வளர்த்த திருஉரு. ஆறுமுகன். முருகன்.
  • ஆறு எழுத்து - 'சரவணபவ' எனும் சடாட்சர மந் தி ரம்.
  • அறு குணன் - சிவன்
  • அறு குமிழ்வட்டம் - கேடகம், கேடயம்
  • அறுகால் – பாம்பு. காலற்றது என்று பொருள்
  • அறு பதம் - வண்டு; இதை அறுகாற் பறவை என்பதும் உண்டு
  • அறுமீன் - கையாந்தகரை எனும் கீரை, கார்த்திகை, ரோகிணி.
  • அறுவாய் - கார்த்திகை
  • அறுமீன் காதலன் - முருகப்பெருமான்
  • அறுசமயம் - சண்மதம் - சைவம், வைணவம், சாத்தம், சௌரம், காணபத்யம், கெளமாரம்
  • ஆறு குறி - கண்ணின் குறி, மூக்கின் குறி, மெய்யின் குறி, செவியின் குறி, நாவின் குறி, மனத்தோடு எண்ணும் குறி
  • அறுவகைக் காயங்கள் - ஐம்பொறிகள், மனம்.
  • அறுசமயம் - ஆறு அகச்சமயங்கள். சைவம், பாசுபதம், பைரவம், மாவிரதம், காளாமுகம், வாமம்,
  • அறுபத்து மூவர் - நாயன்மார்கள் அறுபத்து மூவர்
  • அறு நால்வர் - இருபத்து நான்கு தீர்த்தங்கரர்.
  • ஆறாறு தத்துவம் - முப்பத்தாறு தத்துவங்கள்

உசாத்துணை


✅Finalised Page