ஊர்க்கொலை
ஊர்க்கொலை வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. ஆநிரை கவரக் சென்ற வெட்சியார் குறிஞ்சி நிலத்து எயினரின் ஊரை அழித்தலைப்பற்றிக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பசுவும் கன்றும் உள்ள தொழுவங்களையுடைய குறும்பு என்னும் சிற்றூரை அழித்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
விரை பரி கடவி வில் உடை மறவர்
குறை அழல் நடப்பக் குறும்பு எறிந்தன்று(1.11)
வெண்பா
இகலே துணையா எரி தவழச் சீறிப்
புகலே அரிது என்னார் புக்குப் - பகலே
தொலைவிலார் வீழத் தொடுகழல் ஆர்ப்பக்
கொலை விலார் கொண்டார் குறும்பு (8)
பொருள்: கொலைத் தொழிலால் சிறப்புற்ற வில்லைக் கொண்ட வெட்சி மறவர்கள், பகையுணர்வு ஒன்றே தமக்குத் துணையாகக் கொண்டவராக, நெருப்பு எழும்படியாகச் சீற்றங்கொண்டு, பகையரணுள் புகுந்துபகற்பொழுதிலே எவருக்கும் தோற்காத மறத்தினையுடைய பகைவரது வீரர்கள் செத்து வீழும்படியாகக் கொன்று,தம் வீரக்கழல்கள் ஒலிக்கும் வண்ணம் சுழன்று போரிட்டு, அரணைக் கைப்பற்றிக் கொண்டனர்.
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Mar-2025, 09:47:50 IST