உ.ரா. சாமிநாதபிள்ளை
- சாமிநாதபிள்ளை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாமிநாதபிள்ளை (பெயர் பட்டியல்)
To read the article in English: U.Ra. Saminatha Pillai.
உ.ரா. சாமிநாதபிள்ளை (பொ.யு. 1884 -அக்டோபர் 23, 1958) தமிழ்ப் புலவர், சிற்றிலக்கியப்புலவர், பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வேதாந்தி. நெல்லைநாயகி நீரோட்டக மாலை
முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
தஞ்சை கும்பகோணம் மாவட்டம் திருக்குடந்தைக்கு அருகில் வேளாளர் குலத்தில் பொ.யு. 1884-ல் ஆலாலசுந்தரம்பிள்ளை வழிமுறையில் ராமசாமிப்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக்கல்வி பயின்றார். சிற்றிலக்கியங்கள் கற்றார். நைடதம், பெரிய புராணம், திருவிளையாடற்புராணம் போன்ற பேரிலக்கியங்களையும், நன்னூல், தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் தகுந்த ஆசிரியர்களிடம் கற்றார். சிவப்பிரகாசம், சதாசிவம் ஆகிய இரு மகன்கள் பிறந்தானர்.
ஆசிரியப்பணி
தமிழாசிரியராகப் பணி செய்தார். செட்டிநாட்டில் பள்ளத்தூர் முதலிய இடங்களில் பெருவணிகர்களுக்கு ஆசிரியராக இருந்தார். சு.அ.ராமசாமிப்புலவருக்கு ஆசிரியராக இருந்தார்.
ஆன்மிக வாழ்க்கை
கோயிலூர் மடாலயத்தில் மடத்தலைவராக இருந்த அண்ணாமலை ஞானதேசிகரிடம் வேதாந்த நூல்கள் கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
பலவான்குடியில் காரைச் சிவநேசர் திருகூட்டச் சார்பில் சிவநேசன் கிழமை வெளியீடு பத்திரிகைக்கு உதவியாசிரியராக இருந்தார். சிவநெறி விளக்கக் கட்டுரைகள் பல எழுதினார். திருக்குடந்தை ’யதார்த்தவசனி’ பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார். தனிப்பாடல்கள் பல எழுதினார். சிற்றிலக்கியப் பாடல்கள் பல எழுதினார்.
பாடல் நடை
நெல்லைநாயகி நீரோட்டக மாலை
தாரணி தனிலே அரிதினில் அரிதாய்ச்
சாற்றிய யாக்கையைச் சார்ந்தே
ஏரணி இளைஞன் எனத்திகழ் காலை
எழிற்கலை கற்றிடா திகழ்ந்தேன்
மறைவு
அக்டோபர் 23, 1958-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- நெல்லைநாயகி நீரோட்டக மாலை
- திருவேரக முருகன் வண்ண மஞ்சரி
- கட்டுரைத்திரட்டு
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:31 IST