உலோறன்ஸ்பிள்ளை
From Tamil Wiki
உலோறன்ஸ்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்துப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
உலோறன்ஸ்பிள்ளை இலங்கை மன்னார், மாதோட்டத்தில் பிறந்தார். பாசிக்குடா, சைவலப்பேரியில் வளர்ந்தார். இவர் மரபில் தோன்றிய மக்கள் வழிப் பேரன்தான் இலந்தைவான் கீத்தாம் பிள்ளைப் புலவர்.
இலக்கிய வாழ்க்கை
கிறிஸ்துவின் திருஅவதாரத்தைப் பற்றிக் கூறும் ”மூவிராசாக்கள் வாசகப்பா” நூலை உலோறன்ஸ்பிள்ளை இயற்றினார். பல பாடல்கள் பாடினார். பாடல்கள் அச்சேற்றப்படவில்லை.
நூல் பட்டியல்
- மூவிராசாக்கள் வாசகப்பா
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:உலோறன்ஸ்பிள்ளை: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Dec-2022, 09:11:32 IST