under review

உமாஷானிக்கா

From Tamil Wiki

உமாஷானிக்கா (பிரியதர்சினி) (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், இதழியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

உமாஷானிக்கா இலங்கையில் பிறந்து பெர்லின் நகரில் வசித்து வருபவர்.

இதழியல்

உமாஷானிக்கா ’தேனீ’, ’ஊதா’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் இயங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

உமாஷானிக்கா கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். இலக்கியச் சந்திப்பு,பெண்கள் சந்திப்பு ஆகியவற்றில் பங்கேற்று, பெண்ணுரிமை, மனிதவுரிமை, சமூக அரசியல் சார்ந்த கலந்துரையாடல்களிலும் கருத்தாடல்களிலும் செயல்பட்டு வருகிறார். புகலிடப் பெண்களின் கவிதைகளை உள்ளடக்கி வெளியான முதலாவது கவிதைத் தொகுப்பான 'மறையாத மறு பாதி' யில் 'பிரியதர்சினி' என்ற புனைபெயரில் இவரது கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றதோடு, புகலிடத்தில் வெளியான பெண்கள் சந்திப்பு மலர் உட்பட வேறு சில தொகுப்புகளிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின.

நூல் பட்டியல்

படைப்பு இடம்பெற்ற தொகுப்பு
  • மறையாத மறு பாதி

உசாத்துணை


✅Finalised Page