under review

ஈஞ்சன் கூட்டம்

From Tamil Wiki

ஈஞ்சன் கூட்டம்: ஈஞ்சன் குலம். கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலக்குழுக்களில் ஒன்று. ஈஞ்சை என்பது முள்கொடி போன்ற ஒரு வறண்டநிலத் தாவரம். இதன் பட்டையை உடலில் தேய்த்து குளிப்பதுண்டு. இந்தக் கொடியை குலக்குறியாகக் கொண்டவர்களாக இருக்கலாம்

பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்

வரலாறு

ஈங்கூர் ஈஞ்சன்கூட்டத்தினரின் முதன்மை இடம். தம்பிரான் பட்டியம்மன், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில் 88 ஊர்களுக்கும் ஈஞ்சன் குலத்தினர் காணியாளர்களாக உள்ளனர். காஞ்சிக்கோயில் சேவூர், குருமந்தூர், கவுந்தப்பாடி, தொட்டியம், பவுத்திரம் புகழூர் ஆகியவை பிற காணியிடங்கள்.

உசாத்துணை


✅Finalised Page