under review

இருப்பு

From Tamil Wiki
Iruppu-august22.jpg

இருப்பு இலங்கையிலிருந்து வெளிவந்த காலாண்டிதழ். 1990-களில் கல்முனையிலிருந்து வெளிவந்தது. இதழின் ஆசிரியர் குழாமில் சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்) பிரதான பங்காற்றினார். கவிதை, கவிதை விமர்சனக் குறிப்புகள், கவிதை நூல் அறிமுகங்கள் இவற்றைத் தாங்கி வெளிவந்தது.

தோற்றம்

இருப்பு 1990-ல் சோலைக்கிளியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

உள்ளடக்கம்

இருப்பு இதழின் உள்ளடக்கம் கவிதை சார்ந்ததாக இருந்தது. கவிதைகள், நூல் அறிமுகங்கள், கவிதை விமரிசனக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. நூலகம் வலைத்தளத்தில் இதன் மூன்று இதழ்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

இருப்பு, நூலகம்.காம்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Nov-2024, 21:42:27 IST