இரா. எல்லப்பன்
இரா. எல்லப்பன், (பிறப்பு: 1952) தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களுள் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இரா. எல்லப்பன், 1952-ல், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள பில்லாந்தாங்கல் கிராமத்தில், ராஜகோபால் பிள்ளை - மாணிக்கம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.
நாடக வாழ்க்கை
எல்லப்பன், தனது பெற்றோர்களிடம் நாடகப் பயிற்சி பெற்றார். முதன்முதலாகப் பத்து வயதில் லவகுசா நாடகத்தில் லவனாக நடித்தார். தொடர்ந்து புராண, இதிகாச, சமூக நாடகங்களில் பல்வேறு வேடங்களில் நடித்தார்.
நாடகப் பங்களிப்புகள்
இரா. எல்லப்பன், ஆயிரத்திற்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். முப்பிறவி, லவகுசா, தேவியின் திருவிளையாடல் முதலான நாடகங்களை இயக்கினார். வட ஆற்காடு நாடக நடிகர் சங்கம், பில்லாந்தாங்கல் நாடக மன்றம். நேத்தம் பாக்கர், வையாபுரி நாடக மன்றம் முதலான நாடகக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு, நாடகங்களில் பங்களித்தார்.
வானொலி
எல்லப்பன், சென்னை வானொலி நிலையத்திற்காகப் பல நாடகங்களில் நடித்தார்.
மதிப்பீடு
இரா. எல்லப்பன் திருவண்ணாமலை மாவட்ட நாடகக் கலைஞர்களுள் ஒருவராகவும், நாடக இயக்குநர்களுள் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
உசாத்துணை
- நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Sep-2025, 12:43:36 IST