ஆற்காடு தூதன்
From Tamil Wiki
- தூதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தூதன் (பெயர் பட்டியல்)
To read the article in English: Arcot Thoothan.
ஆற்காடு தூதன் (1940) ஆற்காடு வட்டாரச் செய்திகளை வெளியிட்ட தமிழ் வார இதழ்.
வெளியீடு
1940-ல் தொடங்கப்பட்டு ஞாயிறு தோறும் வெளியிட்ட தமிழ் வாரப்பத்திரிகை. ஆற்காட்டின் செய்திகளை முதன்மைப் படுத்துவதோடு, பல்வேறு நடப்பியல் செய்திகளையும் இணைத்துக்கொண்டு, விழுப்புரத்திலிருந்து வெளிவந்த இதழ் இது. எட்டு பக்கங்களில் தனிப்பிரதி அரையணா விலை என்று அறிவித்துள்ளது.
உள்ளடக்கம்
டால்ஸ்டாயின் தழுவலான தேவரகசியம் என்ற தொடர்கதையையும் வெளியிட்டுள்ளது. பீமவிலாஸ் உயர்தர சிற்றுண்டி போஜன சாலையும், நியூ கோமள விலாஸ் சிறந்த சிற்றுண்டிசாலையும் தொடர்ந்து விளம்பரங்கள் கொடுத்துள்ளன.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:55 IST