ஆர். ராஜகோபாலன்
ஆர். ராஜகோபாலன் (பிறப்பு: 1946) எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர்.
பிறப்பு, கல்வி
ஆர். ராஜகோபாலன் ஆகஸ்ட் 25, 1946 அன்று கோயம்புத்தூர் அருகே போத்தனூரில் ஆர். ராகவன், ஆர். ருக்மணி தம்பதியருக்குப் பிறந்தார். ஆர். ராஜகோபாலன் உடன் பிறந்தவர்கள் ஏழு பேர். இவரது மூத்த சகோதரர் ஆர். வரதராஜன் ஓவியர் கே.சி.எஸ். பணிக்கரின் மாணவராக பயின்று, சென்னை ஓவியக்கல்லூரியில் ஓவியப் பேராசிரியராக பணியாற்றியவர்.
ஆர். ராஜகோபாலன் ஆரம்பக்கல்வியை தாம்பரம் ரயில்வே காலனி கிறிஸ்து ராஜா துவக்கப்பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் படிப்பை கார்லி உயர்நிலைப் பள்ளியில் கற்றார். சென்னை அரசு கலைக்கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். இளங்கலை, முதுகலை இரண்டும் ஆங்கில இலக்கிய துறையில் மாநிலக் கல்லூரியில் பயின்றார். எம்.பில் ஆராய்ச்சியை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முடித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
தனி வாழ்க்கை
ஆர். ராஜகோபாலன் மார்ச் 31, 1983 அன்று கே. மைதிலியை திருமணம் செய்தார். ராஜகோபாலன், மைதிலி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் (ஆனந்தராகவன், கண்ணன்).
ஆர். ராஜகோபாலன் சென்னைப் பல்கலைக்கழகம், சேலம், நாமக்கல், வியாசர்பாடி அரசு கல்லூரி போன்ற கல்லூரிகளில் ஆங்கிலப் பிரிவு உதவிப் பேராசிரியர், இணை ஆசிரியராக முப்பத்தி மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். இறுதியாக சென்னை மாநிலக் கல்லூரியில் பத்து ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
ஆர். ராஜகோபாலன் தமிழில் கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். ஆங்கிலேயர் பற்றி தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகளை 'Routes' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக்கியுள்ளார். பேரா. சி.டி. இந்தியாவுடன் இணைந்து 'பண்பாடு மொழி அடையாளம்', 'பண்பாடு மொழி அதிகாரம்' என இரண்டு ஆராய்ச்சி நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். ஈழத்து எழுத்தாளரான ராய் ரத்தினவேல் ஆங்கிலத்தில் எழுதிய 'Prisoner.# 1056' நாவலை அரும்பு சுப்பிரமணியம் உடன் இணைந்து 'கைதி எண் 1056' என தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
நூற்றாண்டு விழா
ந. பிச்சமூர்த்தியின் நூற்றாண்டு விழா நிகழ்வின் குழு செயலாளராக இருந்தார் (ஆகஸ்ட் 15, 2000)
இதழாசிரியர்
'ழ', 'கவனம்' இலக்கிய இதழ்களில் இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
பதிப்பு பணி
ஆங்கிலத்தில் எழுத்தாளர் கிருபா சத்தியநாதன் எழுதிய 'கமலா ஒரு இந்துப் பெண்ணின் வாழ்க்கை', 'சகுணா ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் வாழ்க்கை' ஆகிய நூல்களை அரசு அனுமதியுடன் செவ்வியல் பதிப்பாகப் பதிப்பித்துள்ளார்.
விருதுகள்
- கவிதைக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது
- கவிதைக்கணம் விருது
- ஆம்பல் அறக்கட்டளை விருது
- திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது
நூல்கள்
கவிதை தொகுப்பு
- அன்பெனும் விதை (டிசம்பர், 2000)
- கால்நடைக் கவிதைகள் (ஜனவரி, 2020)
- ஊழ் போதிவனம் (அக்டோபர், 2025)
சிறுகதை தொகுப்பு
- இயந்திரமாலை (டிசம்பர், 1999)
விமர்சன நூல்
- கவிதையும் புனைகதையும் (டிசம்பர், 2004)
கட்டுரை
- தமிழ் வழியாக ஆங்கில இலக்கணம் (ஆனந்தவிகடன் பப்ளிகேஷன்ஸ், 2008)
மொழியாக்கம்
- That was a Different Season - ஆங்கிலம் (மூலம்: கவிஞர். ரவிசுப்பிரமணியனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்)
- Routledge (Taylor and Francis group) (First Published 2018)
Edited Works
- Culture Language and Identity (Enlish--Tamil in Colonial India 1750--1900. CE) (C.T. Indra And R. Rajagopalan)
- Culture Language and. Power (English--Tamil in Modern India 1900 CE-- Present Day) (C.T. Indra And R. Rajagopalan)
பதிப்பு
(1898-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழிபெயர்ப்பின் செவ்வியல் மறுபதிப்பு)
- கமலா ஒரு இந்துப் பெண்ணின் வாழ்க்கை
- சகுணா ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் வாழ்க்கை
வெளி இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Dec-2025, 09:46:27 IST