under review

ஆர். சிவலிங்கம்

From Tamil Wiki
ஆர். சிவலிங்கம்

ஆர். சிவலிங்கம் (பிறப்பு: 1972) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார். ஸ்ரீ கோகுலக்கண்ணன் நாடக சபாவின் வாத்தியார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆர். சிவலிங்கம் தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டம், பொன்னகரம் வட்டம், ஏர்கொல்பட்டியில் 1972-ல் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை பயின்றார்.

கலை வாழ்க்கை

ஆர். சிவலிங்கத்தின் ஆசான்கள் ராஜேந்திரன், மாது ஆகியோர். பெரிய மாது ஆடிய அர்ஜுனன் தபசைக் கண்டு ஈர்க்கப்பட்டு அவரிடம் சென்று கற்றுக் கொண்டார். ஸ்ரீ கோகுலக்கண்ணன் நாடக சபாவில் கூத்து ஆடினார். இவர் குழுவில் பள்ளிப்பட்டி ராஜு மத்தளமும், பள்ளிப்பட்டி ரவி குழலும் (முகவீணை), வத்தப்பட்டி ஆறுமுகம் ஆர்மோனியமும் வாசிப்பர்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதம்
  • ராமாயணம்
  • சிவபுராணம்
  • நாவல்ஸ்
  • பக்தமார்கண்டேயன்
  • அர்ஜுனன் தபசு

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Nov-2024, 12:01:36 IST