ஆர். உலகநாதன்
ஆர். உலகநாதன் (காசி) (பிறப்பு: 1958) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார் (ஆசான்). மகாபாரதக் கூத்துக்கள் மற்றும் கிளைக்கூத்துக்கள் ஆடுவார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆர். உலகநாதன் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் உள்ள மானாமதுரையில் ராமலிங்கத்திற்கு மகனாக 1958-ல் பிறந்தார். தந்தை, தாத்தா இருவருமே கூத்துக் கலைஞர்கள். எட்டாம் வகுப்பு வரை பயின்றார். தெருக்கூத்து இல்லாத நேரங்களில் விவசாயம் செய்தார்.
கலை வாழ்க்கை
ஆர். உலகநாதனின் ஆசான்கள் கமலக்கண்ணன், கன்னியப்பன், சேகர். உலகநாதன் ஸ்ரீ பவானி அம்மன் நாடக மன்றம், கலைமகள் நாடக மன்றம், மானாமதுரை கீழ்வீதி கன்னியப்பன் நாடக மன்றம் ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். மகாபாரதக் கூத்துக்கள் மற்றும் அதன் கிளைக் கூத்துக்கள் ஆடுவார். ஆரம்பத்தில் கிருஷ்ணன் தூதில் தர்மர் வேடம் போட்டார். அதன் பின் பெண் வேடம் தவிர பிற வேடங்களில் ஆடினார். கட்டியங்காரனாகவும் வேடம் போட்டார்.
மாணவர்கள்
- அல்லிமுத்து
- பெருமாள்
- கலைஞன்
- சங்கர்
- கிருஷ்ணன்
- குட்டி
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதக் கூத்து
- கிருஷ்ணன் தூது
- மணிமாலன் சண்டை
- குறவஞ்சி
- சயிந்தவபங்கம்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Oct-2024, 10:27:03 IST