ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன்
To read the article in English: Ariyavarasan Yazhppiramadhathan.
ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன் சங்க காலப் புலவர். ஆரிய மன்னர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
குறுந்தொகை பாடிய ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன் என்பவரும், கபிலரால் தமிழறிவு பெற்ற ஆரியவரசன் பெயராகிய ஆரியவரசன் பிரகத்தன் என்பவரும் ஒருவரே என்பது தமிழறிஞர்கள் கருத்து.
இலக்கிய வாழ்க்கை
இவர் குறுந்தொகையில் 'கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது’ என்ற துறையில் ஒரு பாடல் பாடினார். ’அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கில்லை’ (தான் கண்டறிந்த ஒன்றை மறைத்துப் பொய் கூறுதல் சான்றோர்க்கு இயல்பாகாது) என்ற கருத்தையும் இப்பாடலில் கூறினார்.
பாடல் நடை
- குறுந்தொகை: 184
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்டு
ஆண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்
மயிற்கண் ணன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉம் கான லானே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:47 IST