under review

ஆசீர்வாதம் மரியதாஸ்

From Tamil Wiki
ஆசீர்வாதம் மரியதாஸ் (நன்றி- செல்லையா)

ஆசீர்வாதம் மரியதாஸ் (அக்டோபர் 26, 1941) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டுக் கூத்துக்களில் முந்நூறுக்கும் மேற்பட்ட மேடைகளில் நடித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆசீர்வாதம் மரியதாஸ் அக்டோபர் 26, 1941-ல் இலங்கை குருநகரில் ஆசீர்வாதம் தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். சிறு வயது முதலே பாரம்பரிய நாட்டுக் கூத்தின் கலையில் ஈடுபட்டார்.

கலை வாழ்க்கை

நடையர் அன்னத்துரை அவர்களின் ’ஆட்டு வணிகன்’ நாட்டுக்கூத்தின் மூலம் ஈர்க்கப்பட்டார். 1950-ல் நாட்டுக்கூத்தினை பலவற்றை மேடையேற்றிய யாழ் குருநகர் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் மேடையேறிய ’பாலகுரன்’ நாடகத்தில் முதன்முதலில் கட்டியக்காரன் வேடத்தில் தன் ஒன்பது வயதில் ஆசீர்வாதம் மரியதாஸ் தோன்றி நடித்தார். வசாவிளான் வடமராட்சி கிழக்கு, கொழும்புத்துறை, நீர்வேலி, குடாரப்பூ, பருத்தித்துறை, கோட்டை, அச்சுவேலி, ஊர்காவற்றுறை, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டுக் கூத்துக்களில் தோன்றியுள்ளார். முந்நூறுக்கு மேற்பட்ட மேடை கண்டுள்ளார்.

இவருடைய ஆசிரியர்கள் குருநகரைச் சேர்ந்த அண்ணாவிமார்களான வைரமுத்து அத்தோனிப்பிள்ளை(ஊசோள்), யோசப்(மச்சுவாய்) சின்னத்துரை, சின்னக்கிளி. பல நாட்டுக் கூத்துக்களை தனது சொந்தச் செலவிலேயே மேடையேற்றினார். 1870-களின் பின்பு நாட்டுக் கூத்து வளர்ச்சியில் முன்நின்று உழைத்த அண்ணாவியார் சாமிநாதன், சுவாம்பிள்ளை, ராசாத்தம்பி, பெண் அண்ணாவியார் திரேசம்மா, சில்லையூர் செல்வராசன், பூந்தான் யோசேப்பு, நீர்வேலி அந்தோனிப்பிள்ளை, பெலிக்கியான், அருமைத்துரை, ஸ்ரன்னிஸ்லாஸ், வ. அல்பிரட், பேக்மன் ஜெயராசா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் நாட்டுக்கூத்து நடிகனாக இருந்த இவர் அண்ணாவியார் ஸ்தானத்திற்கு உயர்ந்தார். சீரடிபிரபு, விஜயமனோகரன், மருதநாட்டு இளவரசி, ஆட்டு வணிகன், வேதத்தின் வெண்புறா, ஜெனோவா, நொண்டி நாடகம் போன்றவற்றை நெறிப்படுத்தி அண்ணாவியார் ஆனார். எஸ்தாக்கியார் நாட்டுக்கூத்தையும், நாட்டுக்கூத்து பாடல்கள் கொண்ட தனிநிகழ்ச்சியையும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கும், உள்ளூர் வானொலிக்கும் தயாரித்து வழங்கியுள்ளார். குருநகர் சென்நோக்ஸ் சனசமூக நிலையத்தின் கலைப்பணி ஸ்தாபனமான யாழ் வான்மதி கலாவயத்தின் நாட்டுக் கூத்துப் பிரிவிற்குப் பொறுப்பேற்றார்.

ஆசிரியர்கள்
  • வைரமுத்து அத்தோனிப்பிள்ளை (ஊசோள்)
  • யோசப் (மச்சுவாய்)
  • சின்னத்துரை
  • சின்னக்கிளி

விருதுகள்

  • இவருடைய கலைச்சேவையை யாழ் சென் றோக்ஸ் சனசமூகநிலையம், யாழ திருமறைக் கலாமன்றம், யாழ் கிறீன் கிங்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியவை இவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளது.

நடித்த கூத்துக்களும், பாத்திரங்களும்

  • பாலசூரன் - கட்டியன் (சேடி)
  • பாலசூரன் - முன் பாலசூரன்
  • சஞ்சுவன் - சஞ்சுவன்
  • மலர்மாலை அல்லது மல்லிகா - குமாரன்
  • மருதநாட்டு இளவரசி - இளவரசன்
  • உடைபடா முத்திரை - அர்பரித்து
  • செனபோன் - முன் அக்காளந்தன்
  • ராசகுமாரி - ராசகுமாரன்
  • வரத மனோகரன் - மனோகரன்
  • கருங்குயில் குன்றத்துக் கொலை - ஜெமீன்தார்
  • மருதநாட்டு இளவரசி - பின் இளவரசன்
  • செனபோன் - அக்காளந்தன்
  • பாலசூரன் - பின் பாலசூரன்
  • விவசார விளக்கம் - பின் குமாரன்
  • பொன்னூல் செபமாலை - குமாரன்
  • செனபோன் - சேனாதிபதி
  • நொண்டி நாடகம் - முன்ராசா
  • செனகப்பூ - தோம்பானு
  • உடைபடா முத்திரை - ஆத்தோ
  • மனோகரன் மந்திரவாதி - மனோகரன்
  • மனோகரன் மந்திரவாதி - மனோகரன்
  • எஸ்தாக்கியார் - கப்பல்காரன்
  • விஜய மனோகரன் - விக்கிரமன்
  • மருதநாட்டு இளவரசி - பின் குமாரன்
  • செனகப்பூ - பின் மந்திரி
  • எஸ்தாக்கியார் - முன் எஸ்தாக்கியார்
  • செனகன்னி நாடகம் - குமாரன்
  • மர்மக்கொலை - வேடுவ மகன்
  • மத்தேஸ் மவுரம்மா - மத்தோன்
  • மூவிராசா - தளபதி
  • தனிப்பாடல் நிகழ்ச்சி - அரச பாடல்கள்
  • சங்கிலியன் சீரடிப் - பிரபு
  • தெய்வ நீதி - வேடன்
  • சங்கிலியன் - காக்கை வன்னியன்
  • ஞானசௌந்தரி - பிலேந்திரன்
  • கருங்குயில் குன்றத்துக் கொலை - பிலேந்திரன்
  • எஸ்தாக்கியார் - எஸ்தாக்கியார்
  • தேவசகாயம்பிள்ளை - 3-ம் அதிகாரி
  • கண்டி அரசன் - தளபதி
  • பண்டாரவன்னியன் - தம்பி
  • செந்தூது - அருளப்பர்
  • தியாக ராகங்கள் - வக்கீல்
  • ஜெனோவா - பின்மந்திரி
  • நொண்டி - நொண்டி

உசாத்துணை


✅Finalised Page