under review

ஆசனம்

From Tamil Wiki

ஆசனம் (ஆதனம்) திருமூலர் குறிப்பிடும் அஷ்ட யோகங்களில் ஒன்று. யோகம் பயில்வோர் அமர்ந்திருக்கும் நிலை. உடலைப் பக்குவப்படுத்தி, சக்கரங்களைத் தூண்டி அதன்மூலமாக உள்ளே பிராண சக்தியை அதிகரிக்கச் செய்யும். எட்டு வகையான யோகங்கள் மூலம் அஷ்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்களாகின்றனர். அஷ்ட யோகங்களில் ஆசனம் மூன்றாவது நிலையில் உள்ளது.

ஆசனம்

  • மூன்றாம் தந்திரம் - 4

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.

விளக்கம்: பத்மாசனம் முதலாக ஆசனங்கள் பல உண்டு, அவற்றுள் சிறப்பாக சொல்லத்தக்கவை எட்டு. அவற்றுள் அனைத்து யோகத்தையும் செய்யச் சிறந்த ஆசனம் சுவத்திகாசனம். சுவத்திகாசனத்திலிருந்து யோகம் செய்தால் சிறந்த தலைவனாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. பத்திராசனம், குக்குட ஆசனம், சிம்மாதனம், பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சோத்திரம், வீர, சுகாதனம் ஆகிய பத்து ஆசனங்களும் யோகத்திற்கு ஏற்ற ஆசனங்கள்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2025, 18:23:57 IST