under review

அஸ்மா தீன்

From Tamil Wiki

அஸ்மா தீன் (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், நாடக ஆசிரியர். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

அஸ்மா தீன் இலங்கை கம்பளையில் அன்வர்ஷா, ஆயிஷா இணையருக்குப் பிறந்தார். கம்பளை ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்றார்.

நாடக வாழ்க்கை

அஸ்மா தீன் பாடசாலை நாட்களில் கவிதை, கட்டுரை, பேச்சு, விவாதம், சிறுகதைப் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றார். பள்ளிக் காலத்திலேயே நாடகம் எழுதித் தயாரித்து நடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். முஸ்லிம் சேவையில் 14 நாடகங்களை எழுதியுள்ளார். வானொலி முஸ்லிம் சேவை மாணவர் மன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 2001-ம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய கலாசார திணைக்களமும், வானொலி முஸ்லிம் சேவையும் இணைந்து நடத்திய தேசிய நாடகப் பிரதி எழுதும் போட்டியில் முதலிடம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

அஸ்மா தீனின் ஆக்கங்கள் விடிவெள்ளி, தினக்குரல், நவமணி ஆகிய பத்திரிகைகளிலும் வானொலியிலும் வெளிவந்தன. இவரது முதலாவது சிறுகதை 1990-ல் 'சிகரம்' என்கின்ற மலையக சஞ்சிகையிலேயே வெளிவந்ததது. 'ஆலமரம்' என்ற சமூக நாவலையும் இவர் எழுதினார். அல் குர்ஆனையும், அல் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு 'சிந்தனை' என்ற பெயரில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய 14 தலைப்புகளுக்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் கவிதைத் தொகுதியொன்றையும் வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • ஆலமரம் (நாவல்)
  • சிந்தனை (கட்டுரைத் தொகுதி)

உசாத்துணை


✅Finalised Page