under review

அஸீஸ் ஆதம்பாவா

From Tamil Wiki
விருது பெறுபவர்: சம்மாந்துறை அசீஸ்

அஸீஸ் ஆதம்பாவா (சம்மாந்துறை அசீஸ்) (பிறப்பு: மே 25, 1950) ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

அஸீஸ் ஆதம்பாவா இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் ஊரில் மே 25, 1950-ல் பிறந்தார். தந்தை அபூபக்கர் ஆதம்பாவா. தாய் வரிசயும்மா என்றும் ஆசியா உம்மா. மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றார். சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் மேல்நிலைக் கல்வி கற்றார். இவர் சிறுவயது முதலே வியாபாரத்தில் ஈடுபாடு உடையவராகவும் சுய தொழில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அஸீஸ் ஆதம்பாவா 1968 முதல் சம்மாந்துறை அசீஸ் என்ற பெயரில் பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் கவிதைகள் எழுதினா. இவர் 'கடையில் பூத்த கவிதை' என்ற நூலின் ஆசிரியர். ஊரின் வரலாறு, ஊரின் தொன்மை, ஆய்வுக் கட்டுரை, இலக்கிய நய பாடல்கள், இலக்கிய தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.

விருது

  • கலாபூஷணம்
  • இலக்கிய வித்தகர் விருது - 2024

நூல் பட்டியல்

  • கடையில் பூத்த கவிதை

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Apr-2026, 17:51:48 IST