under review

அஷ்ரப் ஸமத்

From Tamil Wiki

அஷ்ரப் ஸமத் (பிறப்பு: ஜனவரி 15, 1966) ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

அஷ்ரப் ஸமத் இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் ஜனவரி 15, 1966-ல் பிறந்தார். தந்தை அஷ்ரப், தாய் அவ்வா உம்மா. தெமட்டக்கொடை தமிழ் வித்தியாலயம், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி, தெஹிவளை தொழில்நுட்பக் கல்லூரி, கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா மற்றும் செயலாளர் முகாமைத்துவ உயர் டிப்ளோமா பயிற்சி நெறிகளையும் கற்றார். கணிதத்துறையிலும், ஆங்கிலத்துறையிலும் டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.

பொறுப்புகள்

  • வீடமைப்பு அமைச்சின் வழியாக அலுவலகர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவி முகாமையாளர் பதவிகளை வகித்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அஷ்ரப் ஸமத்-ன் முதல் சிறுகதை 'விமானம் பறந்தது, உயிரும் பறந்தது' 1985-ல் தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. தினகரன், வீரகேசரி, மித்திரன், தினக்குரல், சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Apr-2026, 17:49:42 IST