under review

அலை (இதழ்)

From Tamil Wiki

To read the article in English: Alai. ‎

அலை முதல் இதழ்

அலை (1975-1990) இலங்கையில் இருந்து வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். தொடக்ககால ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அ.ஏசுராசா தொடர்ந்து இவ்விதழை நடத்தினார்.

வெளியீடு

1975-ல் அலை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. ஐ.சண்முகன், மு.புஷ்பராஜா, ஜீவகாருண்யன், அ.ஏசுராசா ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். 55 இராஜவத்தை பேராதனையில் இருந்து அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அலை முதல் ஆண்டு 12 இதழ்கள் வெளிவந்தன. மொத்தம் 35 இதழ்கள் வெளியிடப்பட்டன.

உள்ளடக்கம்

இலங்கை இலக்கியச் சூழலில் முதன்மைகொண்டிருந்த கட்சிசார்ந்த இடதுசாரிப் பார்வைக்கு மாற்றாக அழகியல் நோக்கை முன்வைக்கும் கோணம் கொண்டிருந்தது அலை. பின்னர் விடுதலைப்புலிகளின் தமிழ்த்தேசிய அரசியலின் குரலாக ஒலித்தது. ஈழ இலக்கியச் சூழலில் அமெரிக்க, ஐரோப்பிய நவீனப்படைப்புகளை அறிமுகம் செய்தது. ஏ.ஜே.கனகரட்னா, மு.பொன்னம்பலம், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம், என்.கே.மகாலிங்கம், முருகையன் போன்றவர்கள் எழுதினார்கள்.

உசாத்துணை




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:14 IST