under review

அருஷா ஜெயராஜா

From Tamil Wiki

அருஷா ஜெயராஜா (பிறப்பு: ஜூலை 6, 1986) ஈழத்துப் பெண் எழுத்தாளர். கவிதைகள், புனைவுகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

அருஷா ஜெயராஜா இலங்கை திருகோணமலையில் அருள்தாஸ், வாஷிஹா இணையருக்கு ஜூலை 6, 1986-ல் பிறந்தார். திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் பள்ளிக்கல்வி பயின்றார். சிறுவர் உளவியல் தொடர்பான டிப்ளோமா, ஆங்கிலத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார். பாலர் பள்ளியொன்றை நடத்தி வருகிறார்.

அமைப்புப் பணிகள்

  • திருகோணமலையில் உள்ள அன்பு இல்லத்தில் உறுப்பினராக இருந்து அங்குள்ள பிள்ளைகளுக்கு சேவை செய்து வருகிறார்.
  • ஆதிமொழி உதவும் கரங்களின் ஸ்தாபகர். இது ஒரு அரசு சார்பற்ற அமைப்பு. இதன்வழியாக பின்தங்கிய கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவருவதோடு அவர்களுக்காக கல்வி ரீதியிலான கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.
  • சமயம் சார்ந்த சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

அருஷா கவிதைகள், கதைகள் எழுதி வருகிறார். திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தின் ஸ்தாபகரான அன்னை தங்கம்மா சண்முகம்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை 2017-ல் வெளியிட்டுள்ளார்.

நூல் பட்டியல்

  • அன்னை தங்கம்மா சண்முகம்பிள்ளை (2017)

உசாத்துணை


✅Finalised Page