அருள் முத்துக்குமரன்
அருள் முத்துக்குமரன்(பிறப்பு ஆகஸ்டு 27, 1987 ) இளம் தலைமுறை பௌத்த ஆய்வாளர். தமிழக கேரள பௌத்த உறவுகள், இலங்கை தமிழக பௌத்த உறவுகள், வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட பட்டியல் சமூக ஆளுமைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுவருகிறார். பௌத்தக் கண்ணோட்டத்தில் சிற்பங்கள், கல்வெட்டுகள், பண்பாடு ஆகிவற்றைக் குறித்து ஆய்வுகள் மேற்கொள்கிறார்.
பிறப்பு, கல்வி
அருள் முத்துக்குமரன் கடலூர் மாவட்டம் சிதம்பரநாதன்பேட்டை சேர்ந்த அப்பாதுரை வடமூர் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி இணையருக்கு ஆகஸ்டு 27, 1987 அன்று கடலூர் மாவட்டம் வடமூர் கிராமத்தில் பிறந்தார். அப்பாதுரை கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர்.
தொடக்கக் கல்வியை தனது கிராமத்தில் உள்ள நேருஜி ஆரம்பப் பள்ளியிலும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தெ.நெடுஞ்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 11, 12-ம் வகுப்புகளை நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் உள்ள தவசமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார்.
பொறையார் T.B.M.L கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப்பட்டமும், கல்வியியலில் இளநிலைப் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், முதுகலை கல்வியியல் படிப்பை பாளையங்கோட்டைபுனித சேவியர் கல்லூரியிலும், சென்னை லயோலா கல்லூரில் கணிதம் முதுநிலைப் பட்டமும், செயின்ட் ஜோசப் கல்லூரி யில் கணிதத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார்.
தனி வாழ்க்கை
அருள் முத்துக்குமரன் தன் சொந்த கிராமமான வடமூரில் வசித்து வருகிறார். மனைவி அகல்யா. மகள் தாரா, மகன் ஆதன்.
அமைப்புப் பணிகள்
அருள் முத்துக்குமரன் பௌத்த அமைப்புகள் மற்றும் பட்டியல் சமூக ஆளுமைகளைச் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் அமைப்புடன் இணைந்து பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த மாதத்தை பௌத்த மறுமலர்ச்சி மாதம் என்று கொண்டாடினார். அம்பேத்கர் பிறந்த மாதம் பூர்விகம் உணரும் மாதமாகக் கொண்டாடப்பட்டது. மதுரையில் 'தமிழக கேரள பௌத்த உறவுகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும், அருளாளந்தர் கல்லூரியுடன் இணைந்து 'இலங்கை தமிழக பௌத்த உறவுகள்' என்ற தேசிய கருத்தரங்கமும் நடைபெறக் காரணமாக இருந்தார்.
விருதுகள்
- NAVAYANA DALIT HISTORY FELLOWSHIP 2021
- வில்லியம் கௌடி சமூக ஆய்வாளர் விருது
- பண்டிதர் க.அயோத்திதாசர் விருது
நூல்கள்
- ஓணம் பண்டிகை பௌத்த பண்பாட்டு வரலாறு
- நந்தா விளக்கு
- சுதந்திர போராட்ட வரலாறு புலவர் கூ.ஆறுமுகம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Aug-2025, 19:09:38 IST