அருமருந்து தேசிகர்
அருமருந்து தேசிகர் (அருமருந்த தேசிகர், அருமருந்தைய தேசிகர்) பாண்டிய நாட்டில் திருச்செந்தூரில் வாழ்ந்த புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அருமருந்து தேசிகர் பாண்டிய நாட்டில் திருச்செந்தூரில் வாழ்ந்த புலவர். இவர் தந்தையார் சிவப்பிரகாசர்; வீரசைவர், அருமருந்து தேசிகர் சிதம்பரத்தில் வாழ்ந்த பச்சைக் கந்த தேசிகரை ஞானாசிரியராகக் கொண்டார். வீரசைவராதலின் கன்னட மொழியோடு தொடர்பு கொண்டிருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அருமருந்து தேசிகர் 'அரும்பொருள் விளக்க நிகண்டு' என்னும் நூலை இயற்றியுள்ளார். வீரசைவராதலின் கன்னட மொழியோடு தொடர்பு மிகவுடையவர். கன்னடச் சொற்கள் பலவற்றை இந்நிகண்டினுள் சேர்த்துள்ளார். இரேவணசித்தர் இயற்றியுள்ள அகராதி நிகண்டினை அடியொற்றி இந்நூல் ஆக்கப்பட்டது.
நூல்கள்
அரும்பொருள் விளக்க நிகண்டு
உசாத்துணை
வாழ்வியற் களஞ்சியம்- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2026, 07:10:37 IST