under review

அமீனா சராப்தீன்

From Tamil Wiki

அமீனா சராப்தீன் (பொ.யு. 20-ம் நூற்றாண்டு) ஈழத்துப் பெண் எழுத்தாளர். ஓவியக்கலை தொடர்பான நூல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

அமீனா சராப்தீன் இலங்கை, கண்டி உடத்தலவின்னை மடிகேயில் எம்.ஏ.இஸ்மாயில், மீரா உம்மா இணையருக்குப் பிறந்தார். உடத்தலவின்னை ஜாமிஉல் அஸ்ஹர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜீ.சீ.ஈ உயர்தரம் வரை கல்விகற்றார். கொழும்பில் உள்ள கவின் கலைக் கல்லூரியிலும் அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும் ஓவியக்கலை தொடர்பான பயிற்சியை முடித்தார்.

தனிவாழ்க்கை

அமீனா கணித ஆசிரியரான சராப்தீனை மணந்தார். நான்கு பிள்ளைகள். ஓவியக்கலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

அமீனா ஓவியக்கலை தொடர்பாக மூன்று நூல்களை 1996-ம் ஆண்டு வெளியிட்டார். அல்-இல்மா மகளிர் இயக்கத்தின் செயலாளராகப் பல சமூக சேவைகளையும் செய்துவருகிறார்.

விருதுகள்

  • பாத்ததும்பரை பிரதேச சபை அமீனா சராப்தீனின் சமூக சேவையை பாராட்டி கௌரவித்தது.

நூல் பட்டியல்

  • சித்திரக்கலை: வெளிநாட்டுச் சித்திரம் (சிந்தனை வட்டம், 1996)

உசாத்துணை


✅Finalised Page