under review

அப்புசாமி- சீதாப்பாட்டி

From Tamil Wiki

To read the article in English: Appusami-Seethapatti. ‎

அப்புசாமி- சீதாப்பாட்டி

அப்புசாமி - சீதாப்பாட்டி (1963 - 2017) எழுத்தாளர் ஜ.ரா. சுந்தரேசன் பாக்கியம் ராமசாமி என்னும் பெயரில் உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரங்கள். கதைகளாகவும் படக்கதைகளாகவும் குமுதம் இதழில் தொடர்ந்து வெளிவந்த இக்கதைகள் புகழ்பெற்றவை.

எழுத்து, வெளியீடு

முதன்முதலாக 1963-ஆம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த சிறுகதைகளில் இக்கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வெவ்வேறு கதாபாத்திரங்கள் இணைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தது. இக்கதைகளை எழுதுவதற்காக ஜ.ரா. சுந்தரேசன் தன் தந்தை தாயின் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்று வைத்துக்கொண்டார். 1963-ல் வெளிவந்த அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும் என்னும் நாவலே இக்கதாபாத்திரங்கள் தோன்றிய முழுநீளக்கதை. இக்கதைகளுக்கு படங்கள் வரைந்தவர் குமுதத்தில் கதைகளுக்கு கதையோவியம் வரைபவரான ஜெயராஜ். அப்புசாமி - சீதாப்பாட்டி இருவருக்கும் அவர் முகம் அளித்தார்.

கதைமாந்தர்

  • அப்புசாமி - சீதாப்பாட்டி: கதைகளில் திரும்பத் திரும்ப வரும் கதாபாத்திரங்கள்
  • அப்புசாமி - அப்பாவித்தனமும் துடுக்குத்தனமும் கொண்ட கிழவர். சென்னை குடிசைப்பகுதி மொழி பேசுபவர்
  • சீதாப்பாட்டி - உயர்மட்ட பிராமணப் பழக்கவழக்கங்களும் தோரணையும் கொண்ட அவர் மனைவி
  • ரசகுண்டு - சமையற்காரன், அப்புசாமியின் நண்பன்
  • ருக்மிணி - ரசகுண்டுவின் மனைவி
  • பீமாராவ் - கன்னடம் பேசும் பயில்வான். ரசகுண்டுவின் தோழன்
  • அரைபிளேடு பக்கிரி - பிக்பாக்கெட் அடிக்கும் குடிசைப்பகுதி ஆள்.
  • கீதாப்பாட்டி -அப்புசாமி மேல் பரிவு கொண்டவள். சீதாப்பாட்டியின் கிளப் தோழி
  • அகல்யா சந்தானம் - சீதாப்பாட்டியின் கிளப் தோழி. சீதாப்பாட்டியை மட்டம் தட்டுபவள்

ஊடகம்

அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள் தொலைக்காட்சியில் காத்தாடி ராமமூர்த்தி அப்புசாமியாக நடிக்க ஒளிபரப்பாயின.

அமைப்பு

ஜ.ரா.சுந்தரேசன் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை மன்றம் என்று ஓர் அமைப்பை நடத்தினார்.

நாவல்கள்

  • அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
  • 1001 அப்புசாமி இரவுகள்
  • மாணவர் தலைவர் அப்புசாமி
  • அப்புசாமியும் அற்புத விளக்கும்
  • பாமர கீதை
  • சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி
  • அப்புசாமி படம் எடுக்கிறார்
  • பீரோவின் பின்னால்
  • ஆகஸ்ட் தியாகி அப்புசாமி
  • சீதாப்பாட்டியின் சபதம்
  • வீரப்பன் காட்டில் அப்புசாமி
  • ஆகாசவாணியில் அப்புசாமி
  • அப்புசாமி டைவர்ஸ் கேட்கிறார்
  • கம் ஆன் அப்புசாமி கம் ஆன்
  • மனித வெடிகுண்டு அப்புசாமி
  • அப்புசாமியின் கலர் டிவி
  • அப்புசாமியும் ஹிப்னாடிச பூனையும்
  • அப்புசாமியும் அழகிப் போட்டியும்
  • அப்புசாமியின் தாலி பாக்கியம்
  • அப்புசாமியும் பாரதி நாற்காலியும்

உசாத்துணை