அப்புக்குட்டி ஐயர்
To read the article in English: Appukuddy Iyer.
அப்புக்குட்டி ஐயர் (1788 – 1863) இலங்கைத் தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், அர்ச்சகர். இவர் பாடிய நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் முக்கியமான சைவ சிற்றிலக்கிய நூல்.
வாழ்க்கைக் குறிப்பு
1788-ல் யாழ்ப்பாணம், நல்லூரில் சிகிவாகனஐயரின் மகனாக அப்புக்குட்டி ஐயர் பிறந்தார். இவருடைய வேறுபெயர் வாலசுப்பிரமணியஐயர்.
பணி
நல்லூர் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர். யாழ்ப்பாணம் மாவட்ட நீதித்தலத்தில் புராக்டராக அனுமதி பெறவும் பதிவு செய்யவும் எட்வேட் பாண்ஸ் பிரபுவிடம் 1825-ல் உத்தரவு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சைவப் பிள்ளைத்தமிழில் ஒன்றான நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழை பாடினார். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் வல்லுநர். நினைவுத்திறனுடன் பாடல் பாடும் திறன் கொண்டவர். தனிக்கவிகள் பல பாடியுள்ளார்.
நூல்கள் பட்டியல்
பிள்ளைத்தமிழ்
- நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்
புராணம்
- சூதுபுராணம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- சூதுபுராணம் - thejaffna.com
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:59 IST