under review

அப்பாத்துரை ஐயர்

From Tamil Wiki

அப்பாத்துரை ஐயர்‌ (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்‌)(1824 - 1865) இசைவாணர். வீணை இசைக்கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

அப்பாத்துரை ஐயர்‌ தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதர் இவரின் மகன். அப்பாத்துரை 1865-ல் மறைந்தார்.

கலை வாழ்க்கை

அப்பாத்துரை ஐயர்‌ வீணை திருமலை ஐயரின் மாணவர்‌. தஞ்சை சிவாஜி மன்னன்‌ காலத்தில்‌ சமஸ்தான வித்வானாக இருந்தார்‌. இசையிலும்‌ பரத சாஸ்திரத்திலும்‌ தேர்ச்சி பெற்றவர்.

மாணவர்
  • தஞ்சாவூர்‌ கிருஷ்ணபாகவதர்‌

உசாத்துணை


✅Finalised Page