under review

அபிநந்தநாதர்

From Tamil Wiki

To read the article in English: Abhinandannath. ‎

அபிநந்தநாதர்

அபிநந்தநாதர் சமண சமயத்தின் நான்காவது தீர்த்தங்கரர்.

புராணம்

அபிநந்தநாதர் இக்ஷவாகு குலமன்னர் சன்வராவுக்கும் சித்தார்த்தாவுக்கும் மகனாக அயோத்தியில் மாசி வளர்பிறை 12-ம் நாள் பிறந்தார். ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் வைகாசி வளர்பிறை 6-ம் நாள்மோட்சம் அடைந்தார். இவர் ஐம்பது லட்சம் ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், 350 வில் (1050 மீட்டர்) உயரம் இருந்ததாகவும் சமணர்கள் நம்புகின்றனர்.

அடையாளங்கள்

அபிநந்தநாதரின் பாதச்சுவடுகள்
  • நிறம்: தங்கம்
  • மரம்: அரச மரம்
  • விலங்கு: குரங்கு
  • முதல் உணவு: மன்னர் இந்திரதத்தனால் வழங்கப்பட்ட கீர்.
  • இயக்கர்: யக்யேஸ்வரன்
  • யட்சினி: காளிகா

அபிநந்தநாதர் கோயில்

  • அபிநந்தநாதர் கோயில், மதுபன், ஜோர்ஹாத், அசாம்
  • அபிநந்தநாதார் சந்நதி, சிகார்ஜி, ஜார்க்கண்டு
  • அபிநந்தநாதரின் பாதச்சுவடுகள், சிகார்ஜி

உசாத்துணை


✅Finalised Page