under review

அனுஷியா சேனாதிராஜா

From Tamil Wiki
அனுஷியா சேனாதிராஜா

அனுஷியா சேனாதிராஜா (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1962) ஈழத்துப்பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், பேராசிரியர், பெண்ணியச் செயல்பாட்டாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

அனுஷியா சேனாதிராஜா இலங்கை யாழ்ப்பாணம், காரைநகரில் சேனாதிராஜா, புவனேஸ்வரி இணையருக்கு ஆகஸ்ட் 16, 1962-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை காரைநகர் யாழ்டன் கல்லூரியில் பயின்றார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இளம்கலைமாணிப் பட்டமும், பச்சையப்பா பல்கலைக்கழத்தில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.

ஆசிரியப்பணி

அனுஷியா சேனாதிராஜா 1998–2000-ம் ஆண்டு வரை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வருகை தரு விரிவுரையாளராகப் பணியாற்றினார். 2001-ல் கொழும்புப் பல்கலைக்கழத்தின் வரலாற்றுத்துறை வருகை தரு விரிவுரையாளராகப் பணியாற்றினார். 2002-ல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார்.

பொறுப்புகள்

அனுஷியா சேனாதிராஜா இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக விஞ்ஞான துறைத்தலைவராக இருந்தார்.

அமைப்புப் பணிகள்

அனுஷியா சேனாதிராஜா இளம் பெண்களுக்கான சமூக, பொருளாதாரம் சார்ந்த அமைப்புகளில் ஈடுபட்டு சேவை செய்தார். சமூக செயற்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அனுஷியா சேனாதிராஜா வரலாறு, கல்வி, பெண்கள் சார்ந்த கல்வி வளர்ச்சி, பால்நிலை தொடர்பான கட்டுரைகள், மாநாட்டு கட்டுரைகள் எழுதினார். இவரின் கட்டுரைகள் பெண், நிவேதினி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தன. வரலாற்று நூல்களுக்கு அணிந்துரையும் ஆய்வுரையும் எழுதினார்.

நூல் பட்டியல்

  • Indo- Srilanka Relationship (1948-1964) With Special Reference To TamilNadu

உசாத்துணை



✅Finalised Page