under review

அண்ணா பதக்கம்

From Tamil Wiki

அண்ணா பதக்கம், ஆண்டுதோறும், தமிழக அரசால், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் ஆற்றப்படும் வீர தீர செயலுக்காக வழங்கப்படுகிறது.

அண்ணா பதக்கம்

அண்ணா பதக்கம், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் ஆற்றிய வீர தீர செயலுக்காக வழக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே தேர்ந்தெடுக்கப்படும் ஆறு நபர்களுக்கு இப்பதக்கம் வழங்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கு வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும். இவ்விருது பதக்கமும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் கொண்டது.

அண்ணா பதக்கம் பெற்றவர்கள்

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 2012 எஸ். ரவி
2 2012 என். பிரியா
3 2012 எஸ். ஹரிஷ்குமார்
4 2013 எம். தேவராஜ் (மறைவுக்குப் பின்)
5 2013 எம், ராஜா
6 2014 எஸ் கோபிநாத் (மறைவுக்குப் பின்)
7 2014 ஏ. குனேந்திரன் (மறைவு)
8 2014 எஸ்.பி. ரஹமத்துல்லா
9 2014 தெப்பேஸ்வரன்
10 2015 பி. சிவக்குமார்
11 2015 பி. கந்தசாமி
12 2015 ஏ. பழனிவேல் ராஜா
13 2015 எம். பார்த்தசாரதி
14 2016 எம். எஸ். பாஸ்கர்
15 2016 ஜி. ஶ்ரீனிவாசன்
16 2017 செல்வி டபிள்யூ. துர்காதேவி
17 2018 கே. சண்முகம்
18 2019 ஜி. ரஞ்சித்குமார்
19 2019 ஆர். ஸ்ரீதர்
20 2019 என். சூர்யாகுமார்
21 2021 ரா. புகழேந்திரன்
22 2021 ஜெ. சுரேஷ்
23 2021 பிரகாஷ்
24 2021 பா. முல்லை
25 2022 கி அசோகன்
26 2022 மாஸ்டர் லோகித்

உசாத்துணை


✅Finalised Page