அணங்கு
அணங்கு (இதழ்) (2006) பெண்ணியச்சிந்தனைகளை உள்ளடக்கிய காலாண்டிதழ்.
வெளியீடு
அணங்கு இதழ் ஜீன்-ஆகஸ்டு 2006 முதல் வெளிவரும் சிற்றிதழ். காலாண்டிதழாக வெளிவருகிறது. இவ்விதழின் ஆசிரியர் மாலதி மைத்திரி. அணங்கு மாதாகோவில் வீதி, புதுச்சேரியிலிருந்து வெளிவருகிறது.
நோக்கம்
"குடும்பத்தின் வயிற்றுப் பாட்டுக்காகப் பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்ட பெண்கள், விற்கப்பட்ட பெண்கள் என சமூகமே விஷத்தழையைத் தின்ற மாடு மாதிரி நீலம் பாரித்து வீங்கிப்போய் உள்ளது. நிலத்தையும் நீரையும் தெய்வமாக வணங்குகிறவர்கள், அதனால்தான் விற்றுக்கொண்டிருக்கிறார்கள், பெண்ணையும் தெய்வமாக வணங்குபவர்கள் பெண்களையும் எல்லா சந்தையிலும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணியத்தை ஏற்காத மாற்று அரசியலோ மனித விடுதலை அரசியலோ ஒரு போதும் உருவாக முடியாது. சுதந்திரமான பயமற்ற பேச்சும் விவாதமுமே அதற்கான தொடக்கம்" என்ற அறிவிப்புடன் அணங்கின் முதல் இதழ் வெளியானது.
அணங்கு இதழ் நவீன இலக்கியத்தில் பெண்ணியப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவருவதை நோக்கமாகக் கொண்டது. 'பெண்கள் வெளி' என்ற அறிவிப்புடன் வெளிவந்தது.
உள்ளடக்கம்
அணங்கு இதழ் அறுபத்தி நான்கு பக்கங்களைக் கொண்டது. இவ்விதழில் கதைகள், கட்டுரைகள், நூல்விமர்சனம், மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், நேர்காணல், கருத்தரங்கு குறித்த விவாதங்கள் ஆகியன இடம்பெற்றன. பெண்ணியம், பெண்ணெழுத்து குறித்த கட்டுரைகள் வெளிவந்தன.
உசாத்துணை
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Jan-2023, 14:52:22 IST