under review

அடிமறிமண்டில ஆசிரியப்பா

From Tamil Wiki

ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, நாற்சீரடியாகத் தொடங்கி, நாற்சீரடியாகவே தொடர்ந்து நாற்சீரடியாகவே முடிவது அடிமறிமண்டில ஆசிரியப்பா. அடிகளை மறித்து (இடம் மாற்றி) வைத்தாலும் ஓசையும் பொருளும் பிழைபடாது வருவதால் இதற்கு அடிமறி மண்டில ஆசிரியப்பா என்ற பெயர் வந்தது.

அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இலக்கணம்

  • ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று வரும்.
  • நாற்சீரடியாகத் தொடங்கி, நாற்சீரடியாகவே தொடர்ந்து நாற்சீரடியாகவே முடியும்.
  • அடிகளை மாற்றி வைத்தாலும் பாடலின் ஓசையோ பொருளோ கெடாது.

உதாரணப் பாடல்

தீர்த்தம் என்பது சிவகங் கையே
ஏத்த ருந்தலம் எழிற்புலி யூரே
மூர்த்தி அம்பலக் கூத்தன துருவே.

மேற்காணும் பாடலில் எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டதாக இருக்கின்றன. அடிகளை முன் பின்னாக மாற்றிப் பார்த்தாலும் பொருளோ ஓசையோ மாறவில்லை என்பதனால் இது அடிமறிமண்டில ஆசிரியப்பா.

உசாத்துணை


✅Finalised Page