under review

அக்குரோணி

From Tamil Wiki
அக்குரோணி படைப்பிரிவு விவரங்கள்

அக்குரோணி (அக்ஷௌஹிணி) என்பது பழங்காலத்திய போர்ப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். இராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும், ஜெயமோகன் எழுதிய வெண்முரசிலும் இதுபற்றிய தகவல்கள் உள்ளன.

அக்குரோணி படைப்பிரிவு விவரங்கள்

பழங்காலத்திய போர்களில் யானை, குதிரை, தேர் மற்றும் ஆட்கள் பயன்படுத்தப்பட்டனர். பல்வேறு உட்பிரிவுகள் கொண்ட இப்படைகளின் மொத்த எண்ணிக்கை ‘அக்குரோணி’ என்று அழைக்கப்பட்டது. இது சம்ஸ்கிருதத்தில் அக்ஷௌஹிணி என்று அழைக்கப்படுகிறது.

பார்க்க: அக்ஷௌஹிணி

அக்குரோணி உட் பிரிவுகள்

  • ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரை, ஐந்து ஆட்கள் கொண்ட ஒரு பிரிவு ’பத்தி’ எனப்பட்டது.
  • மூன்று பத்தி கொண்டது ஒரு சேனாமுகம்.
  • மூன்று சேனாமுகம் கொண்டது ஒரு குலுமம்.
  • மூன்று குலுமம் கொண்டது ஒரு கணம்.
  • மூன்று கணம் கொண்டது ஒரு வாகினி
  • மூன்று வாகினி = ஒரு பிரதனை
  • மூன்று பிரதனை = ஒரு சமு
  • மூன்று சமு = ஒரு அனீகம்
  • பத்து அனீகம் கொண்டது ஒரு அக்குரோணிப் படைப்பிரிவு.

ஒரு அக்குரோணி படைப்பிரிவில் 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள், 1,09,350 படை வீர்ர்கள் இடம்பெறுவர். மொத்தம் 2,18,700 எண்ணிக்கையைக் கொண்டது ஒரு அக்குரோணிப் படை.

அக்குரோணிப் படை கணக்கிடும் விதம்: வேறு முறை

அக்குரோணிப் படையின் எண்ணிக்கை வேறு வகையிலும் கணக்கிடப்பட்டது.

  • ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரை, ஐந்து ஆட்கள் கொண்ட ஒரு பிரிவு பதாதி.
  • மூன்று பதாதி கொண்டது ஒரு சேனாமுகம்
  • மூன்று சேனாமுகம் கொண்டது ஒரு குமுதம்
  • மூன்று குமுதம் கொண்டது ஒரு கணகம்
  • மூன்று கணகம் கொண்டது ஒரு வாகினி
  • மூன்று வாகினி கொண்டது ஒரு பிரளயம்
  • மூன்று பிரளயம் கொண்டது ஒரு சமுத்திரம்
  • மூன்று சமுத்திரம் கொண்டது ஒரு சங்கம்
  • மூன்று சங்கம் கொண்டது ஒரு அநீகம்
  • பத்து அநீகம் கொண்டது ஒரு அக்குரோணி

இந்த வகைக் கணக்கீட்டில், ஒரு அக்குரோணிப் படையில், தேர்கள் 65,610, யானைகள் 65,610, குதிரைகள் 1,96,830, படைவீர்ர்கள் 6,56,100 ஆகியன அடங்கும்.

மகாபாரத்தில் அக்குரோணிப் படை எண்ணிக்கை

மகாபாரத்தில், கௌரவர் அணியில் 11 அக்குரோணிப் படைகளும், பாண்டவர் அணியில் 7 அக்குரோணி படைகளும் பயன்படுத்தப்பட்டன. இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை, (முதல் வகைக் கணக்கீட்டின்படி) 39,36,600.

இராமாயணத்தில் அக்குரோணிப் படை எண்ணிக்கை

இராமாயணத்தில் 60000 அக்கோரோணிப் படைகள் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை, (முதல் வகைக் கணக்கீட்டின்படி) 1312, 20,00000.

உசாத்துணை


✅Finalised Page