under review

வேதநாயகம் சாஸ்திரியார் மரபு

From Tamil Wiki
Revision as of 11:12, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வேதநாயகம் சாஸ்திரியார்
நோவா ஞானாதிக்கம்

வேதநாயகம் சாஸ்திரியார் மரபு (1918 ) தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியாரின் குருதிவழி வாரிசுகள் தங்களில் மூத்தவரை வேதநாயகம் சாஸ்திரியார் என அறிவித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு கிறிஸ்தவ திருச்சபைகளில் மரபுவழி இடம் உள்ளது

மரபுச்சடங்கு

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் கிறிஸ்தவ கவிஞர்களில் முதன்மையானவர். 1815 , 1818-ம் ஆண்டுகளில் அவருக்கும் சீர்திருத்த கிறிஸ்தவ மரபைச் சேர்ந்த டேனிஷ் மிஷன் திருச்சபைக்கும் ஓர் ஒப்பந்தம் உருவானது. அதன்படி வேதநாயகம் சாஸ்திரியாரின் வாரிசுகள் அவர்களும் வேதநாயகம் சாஸ்திரி என்னும் பட்டத்துடன் அவருக்கு அளிக்கப்பட்ட எல்லா மரியாதைகளும் திருச்சபையில் இருந்து பெற்றுக்கொண்டு இறைபப்ணி ஆற்றலாம்.

1815 தை மாதம் ஒன்றாம் தேதியும் பின்னர் 1918 புரட்டாசி ஒன்றாம் தேதியும் தஞ்சையில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் ’நீதிமான்களுயிர்த்தெழுவரைக்கும் புத்திரபாரம்பரையாயெங்களுடைய உங்கள் சுதந்திரத்தையனுபவித்துக்கொண்டு எங்களுக்குமெங்கள் பின்னடியாராகிய சந்ததியாருக்கும் நன்மையுண்டாகத்தக்கதாக திரியோக பராபர வஸ்துவாகிய யேசுராஜாவை சகலவித ராகங்களுடே பாடி கீர்த்தனம் பண்ணிக்கொண்டு சுகத்திலிருப்பீர்களாகவும்’ என்று குறிப்பிடுகிறது.

அதன்பின் தொடர்ச்சியாக வேதநாயகம் சாஸ்திரியார் மரபினர் தங்கள் குடியில் முதல் மைந்தருக்கு வேதநாயகம் சாஸ்திரியர் என்னும் பட்டத்தை சூட்டிக்கொள்கிறார்கள்

மரபுவரிசை

  • வேதநாயகம் சாஸ்திரியாரின் முதல் மகன் நோவா ஞானாதிக்கம் சாஸ்திரி வேதநாயகம் சாஸ்திரி என அறியப்பட்டார்.
  • அவருக்குப்பின் அவருடைய முதல் மகன் வேனாநந்தம் பிள்ளை வேதநாயகம் சாஸ்திரியாக பட்டம் பெற்றார்.
  • தொடர்ந்து அவர் மகன் சாம் வேதநாயகம் பிள்ளை வேதநாயகம் சாஸ்திரியாக அறியப்பட்டார்.
  • அவர் மகன் துரைராஜ் பாகவதர் வேதநாயக சாஸ்திரியார் அப்பதவியில் இருந்தார்
  • இப்போது கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார் அப்பட்டத்தைக் கொண்டிருக்கிறார்

உசாத்துணை


✅Finalised Page