under review

மு. பொன்னவைக்கோ

From Tamil Wiki
Revision as of 00:52, 19 October 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மு. பொன்னவைக்கோ

மு. பொன்னவைக்கோ (இரத்தின சபாபதி) (பிறப்பு: மார்ச் 7, 1946) கணினித்தமிழுக்கு பங்களிப்பு செய்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநராகவும் ஆய்வாளராகவும் இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. பொன்னவைக்கோவின் இயற்பெயர் இரத்தின சபாபதி. கடலூர் மாவட்டம் செங்கமேட்டில் முருகேச உடையார், பொன்னிக்கண்ணு இணையருக்கு மகனாக மார்ச் 7, 1946-ல் பிறந்தார். செங்கமேடு அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், வழுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும் பயின்றார். மீனம்பாக்கம் அ.மா.ஜெயின் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலைப்பட்டங்கள் பெற்றார். தில்லி இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தனித்தமிழ் இயக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் தன் தாயாரின் பெயரை இணைத்துத் தன் பெயரைப் ‘பொன்னவைக் கோ’ என மாற்றிக்கொண்டார்.

பணி

பொன்னவைக்கோ இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றில் திட்டப் பொறியாளராக, அதிகாரியாக, அறிவுரைஞராகப் பணியாற்றினார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநராகவும் ஆய்வாளராகவும் இருந்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், பாரத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராக இருந்தார்.ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றிய காலத்தில் மின்னமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல புதிய கண்டுபிடிப்புகள் செய்தார். இவர் உருவாக்கிய கருவிகள் கோ-மாதிரிகள் என அழைக்கப்பட்டன.

தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் முதல் இயக்குநர். இணையவழிக் கல்விக்கு வழி செய்தார். உலகத் தமிழ் தகவல் தொழிநுட்ப மன்றம் (உத்தமம்) International Fourm for Information technology in Tamil(INFITT) அமைப்பிற்குப் பெயர் சூட்டினார்.

இலக்கிய வாழ்க்கை

மு. பொன்னவைக்கோ வா.செ. குழந்தைசாமியின் மாணவர். தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு கட்டுரைகள் எழுதினார். மு. பொன்னவைக்கோ தமிழில் எழுதிய அறிவியல் தொடர்பான பாடநூல்கள் அரசு நிறுவனத்தின் வழி வெளியிடப்பட்டன. தமிழில் பொறியியல் கலைச்சொற்கள் உருவாக்கினார்.

நூல் பட்டியல்

  • மெல்லத் தமிழ் இனி வெல்லும்
  • அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்
  • பொன்னவைக்கோ கவிதைகள்
கணிப்பொறி சார்ந்த நூல்கள்
  • கணிப்பொறியியல்
  • கணிப்பொறியும் தகவல் தொடர்பியலும்
  • HTML- ஓர் அறிமுகம்
  • C மொழி
  • ஸ்டார் ஆபிஸ்
  • விஷீவல் பேசிக்
  • ஜாவா
  • அறிவியல் தமிழ்க் கலைச்சொற்கள்
  • தமிழ்க் கணிப்பொறி மொழிகள்
  • இணையத் தமிழ் வரலாறு

உசாத்துணை


✅Finalised Page