being created

பா. ஜம்புலிங்கம்

From Tamil Wiki
Revision as of 11:30, 19 September 2023 by Madhusaml (talk | contribs)

பா. ஜம்புலிங்கம் (பிறப்பு: ஏப்ரல் 2, 1959), பௌத்த ஆய்வாளர். களப்பணிகளில் 60-க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

பிறப்பு, கல்வி

பா. ஜம்புலிங்கம் ஏப்ரல் 2, 1959 அன்று கும்பகோணத்தில் பாலகுருசாமி-தர்மாம்பாள் இணையருக்குப் பிறந்தார். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் புதுமுக வகுப்பும், பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்றார்.


தனி வாழ்க்கை

சென்னை, கோவை முதலிய ஊர்களில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழத்தில் தட்டச்சு சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.

தமிழ்ப் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்த ஐராவதம் மகாதேவனுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். சோழர் கால ஓவியங்களைப் பார்வையிட அவருடன் தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் சென்றார். கார்த்திகேசு சிவத்தம்பியின் 'Literary History in Tamil' நூலைத் தட்டச்சு செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

பா. ஜம்புலிங்கத்தின் மனைவி பாக்கியவதி, மகன்கள் பாரத், சிவகுரு. தற்போது தஞ்சையில் வசித்து வருகிறார்.

ஆய்வு

பா. ஜம்புலிங்கம் பல்கலைக்கழத்தில் பதிப்புத்துறை தொடங்கி பல துறைகளில் பணிபுரிந்தார். தேர்வுப்பிரிவில் வேலை பார்த்தபோது ஆய்வாளர்களுடன் கிடைத்த நட்பும், பல துறைகளைச் சார்ந்த ஆய்வேடுகளைக் காணும் வாய்ப்பும் அவருக்கு ஆய்வில் ஆர்வத்தைத் தூண்டின. பணிபுரிந்து கொண்டே படிப்பும் வாய்ப்பு இருந்ததால் முதுகலைப் பட்டம் பெற்றார். ‘Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur district’ என்ற தலைப்பில் இளம் முனைவருக்கான ஆய்வையும், 'சோழநாட்டில் பௌத்தம்' என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வையும் மேற்கொண்டார்.



விருதுகள்

மதிப்பீடு

நூல்கள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.