under review

தேவராய சுவாமிகள்

From Tamil Wiki
Revision as of 11:14, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தேவராய சுவாமிகள் (பால தேவராய சுவாமிகள்) (தேவராயன்) (வல்லூர் தேவராய பிள்ளை) (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப்புலவர். கந்தஷஷ்டி கவசம் எழுதியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தேவராய சுவாமிகள் 1857-ல் தொண்டை மண்டலம் வல்லூரில் வீரசாமிப்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். பெங்களூரில் மைசூர் அரசரிடம் கணக்கர் வேலை பார்த்தார். சைவ சமயத்தைச் சேர்ந்தவர். இவரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

இலக்கிய வாழ்க்கை

தேவராய சுவாமிகள் கந்தசுவாமி மேல் துதியாக கந்தஷஷ்டி கவசம் எழுதினார். காப்பு வெண்பா தவிர கந்த ஷஷ்டி கவசம் 238 அடிகளைக் கொண்ட நில மண்டில ஆசிரியப்பாவினையும் உடையது. கந்தசஷ்டி கவசத்திற்கு சக்காடு இரத்தினவேல் முதலியார் மகன் சபாபதி முதலியார் விருத்தியுரை எழுதினார். தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம் (சுவாமி மலை), குன்று தோறாடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசங்கள் பாடியுள்ளார்.

குசேலோபாக்கியானம் இவர் இயற்றிய மற்றொரு குறிப்பிடத்தக்க நூல். கண்ணன் குசேலர் இருவரின் நட்பைக் கூறுவது.

நூல் பட்டியல்

  • கந்தஷஷ்டி கவசம்
  • சிவ கவசம்
  • சண்முக கவசம்
  • சக்தி கவசம்
  • குசேலோபாக்கியானம்
  • நாராயண கவசம்
  • தணிகாசல மாலை
  • பஞ்சாக்கர தேசிகர் பதிகம்
  • சேட மலை மாலை

உசாத்துணை


✅Finalised Page