under review

அம்மணி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 20:25, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)

அம்மணி அம்மாள் (20-ஆம் நூற்றாண்டு) விடுதலைக்கு முந்தைய தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். தமிழின் தொடக்ககாலச் சிறுகதையை எழுதியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இவரைப் பற்றிய விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

தமிழின் முதல் சிறுகதையை எழுதியவராக மதிப்பிடப்படுகிறார்.இவர் எழுதிய "சங்கல்பமும் சம்பவமும்" என்ற சிறுகதை 1913-ல் விவேகபோதினி இதழில் வெளியானது. வ.வே.சு ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம்' வெளியாவதற்கு இரண்டாண்டுகள் முன்பே இச்சிறுகதை வெளியானது. ஆகவே இக்கதையை தமிழின் முதல்சிறுகதை என்று சொல்லலாம் என ஆய்வாளர் அரவிந்த் சுவாமிநாதன் குறிப்பிடுகிறார்

கலைமகள் இதழில் "லஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்" சிறுகதை வெளியாகியுள்ளது. இக்கதை இ.வி. லூகாஸ் எழுதிய school of sympathy -ன் தழுவலைக் கொண்டது. "பசுக்களின் மகாநாடு" சிறுகதை 1939-ல் 'சில்பஸ்ரீ’ இதழில் வெளியானது.

"அம்மணி அம்மாள்" என்ற பெயரில், 'சோபனமாலை’, '356 விடுகவிகள் அடங்கிய நூதன அற்புதவிடுகவிக் களஞ்சியம்’ போன்ற நூல்கள் அக்காலத்தில் வெளிவந்துள்ளன. இப்படைப்புகள் இவருடையதா என்பதை வரையறுக்கமுடியவில்லை.

இலக்கிய இடம்

இவரின் சிறுகதைகள் சமூக நலப்பிரச்சனைகளை மையமாகக் கொண்டு அமைந்தவை. அம்மணி அம்மாளின் ’சங்கல்பமும் சம்பவமும்’ சிறுகதை பற்றி, "மேலை நாட்டு பாணியில் ஆங்கிலக் கட்டுரைகளையும், கதைகளையும் தழுவி எழுதப்பட்ட கதை" என சிட்டி-சிவபாதசுந்தரம் இரட்டையர் மதிப்பிடுகின்றனர்.

நூல்கள்

சிறுகதைகள்
  • லஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம் (1933)
  • பசுக்களின் மாகாநாடு
  • லஷ்மி அம்மாள்

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


✅Finalised Page