User:Navingssv: Difference between revisions

From Tamil Wiki
m (Creating user page for new user.)
 
(13 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
Navin GSSV will be contributing to tamil wiki as an author
[[File:நவின்.jpg|thumb|''எழுத்தாளர் [[ஜெயமோகன்|ஜெயமோகனுடன்]] ஜி.எஸ்.எஸ்.வி.நவின்'']]
ஜி.எஸ்.எஸ்.வி. நவின் (ஜுன் 3, 1993) தமிழ் எழுத்தாளர். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.
== பிறப்பு, கல்வி ==
ஜி.எஸ்.எஸ்.வி. நவின் (முழுப்பெயர்: ஜி. சூரிய சண்முக வேலாயுத நவின்) அன்று திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கணேஷ், சண்முகசுந்தரி தம்பதிகளுக்கு மூத்த மகனாக ஜுன் 3, 1993 அன்று பிறந்தார்.
 
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார். எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆழ்வார்குறிச்சியிலுள்ள பரம கல்யாணி மேல்நிலைப் பள்ளியிலும், அமெரிக்கன் காலேஜ் மேல் நிலைப்பள்ளியிலும் பயின்றார். மேல் நிலைக்கல்வியை ஃபுஸ்கோஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் கற்றார்.
 
கோயம்புத்தூர் கற்பகம் பொறியியல் கல்லூரியில் பி.இ. (எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்) இளங்கலைப் பட்டம் பெற்றார்.
== தனிவாழ்க்கை ==
[[User:Kirupa Krishnan|கிருபாலட்சுமியை]] பிப்ரவரி 6, 2022-ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியுடன் கோவையில் வசித்து வரும் இவர் பெங்களூரிலுள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  
== இலக்கிய வாழ்க்கை ==
இளவயதிலிருந்தே புத்தகம் வாசிக்கும் ஆர்வமுடைய நவின், எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் தொகுப்பு வழி நவீன தமிழ் இலக்கியத்திற்குள் நுழைந்து தற்போது சிறுகதைகள் எழுதி வருகிறார். நாட்டாரியல் இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்ட இவர் அது சார்ந்த புனைவுகளை சிறுகதைகளுக்குள் முயற்சித்துப் பார்க்கிறார். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
 
தமிழ் நவீனக் கவிதைகளுக்காக ”கவிதைகள்” மின்னிதழை [[மதார்|கவிஞர் மதார்]] மற்றும் [[ஆனந்த்குமார்|கவிஞர் ஆனந்த்குமாருடன்]] இணைந்து நடத்தி வருகிறார். விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழ் விக்கி இணையதளத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.
== சிறுகதைகள் ==
* [https://www.jeyamohan.in/132671/ யாயும் ஞாயும்]
*[https://vallinam.com.my/version2/?p=7293 நிசப்தத்தின் அருகில்]
*[https://vallinam.com.my/version2/?p=7501 எச்சம்]
* [https://vallinam.com.my/version2/?p=7599 மோட்சம்]
* [https://akazhonline.com/?p=3430 நித்தியம்]
*[https://vallinam.com.my/version2/?p=7950 மரணக்குழி]
* [https://vallinam.com.my/version2/?p=8073 ஊர்த்துவ தாண்டவம்]
*[https://vallinam.com.my/version2/?p=8157 தீர்வை]
*[https://vallinam.com.my/version2/?p=8462 இசக்கி]
== வெளி இணைப்புகள் ==
* [https://gssvnavin.wordpress.com/ நவின் வலைதளம்]
* [http://www.kavithaigal.in/ கவிதைகள் மின்னிதழ்]

Latest revision as of 22:25, 10 September 2023

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஜி.எஸ்.எஸ்.வி.நவின்

ஜி.எஸ்.எஸ்.வி. நவின் (ஜுன் 3, 1993) தமிழ் எழுத்தாளர். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.

பிறப்பு, கல்வி

ஜி.எஸ்.எஸ்.வி. நவின் (முழுப்பெயர்: ஜி. சூரிய சண்முக வேலாயுத நவின்) அன்று திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கணேஷ், சண்முகசுந்தரி தம்பதிகளுக்கு மூத்த மகனாக ஜுன் 3, 1993 அன்று பிறந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார். எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆழ்வார்குறிச்சியிலுள்ள பரம கல்யாணி மேல்நிலைப் பள்ளியிலும், அமெரிக்கன் காலேஜ் மேல் நிலைப்பள்ளியிலும் பயின்றார். மேல் நிலைக்கல்வியை ஃபுஸ்கோஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் கற்றார்.

கோயம்புத்தூர் கற்பகம் பொறியியல் கல்லூரியில் பி.இ. (எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்) இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கிருபாலட்சுமியை பிப்ரவரி 6, 2022-ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியுடன் கோவையில் வசித்து வரும் இவர் பெங்களூரிலுள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  

இலக்கிய வாழ்க்கை

இளவயதிலிருந்தே புத்தகம் வாசிக்கும் ஆர்வமுடைய நவின், எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் தொகுப்பு வழி நவீன தமிழ் இலக்கியத்திற்குள் நுழைந்து தற்போது சிறுகதைகள் எழுதி வருகிறார். நாட்டாரியல் இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்ட இவர் அது சார்ந்த புனைவுகளை சிறுகதைகளுக்குள் முயற்சித்துப் பார்க்கிறார். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.

தமிழ் நவீனக் கவிதைகளுக்காக ”கவிதைகள்” மின்னிதழை கவிஞர் மதார் மற்றும் கவிஞர் ஆனந்த்குமாருடன் இணைந்து நடத்தி வருகிறார். விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழ் விக்கி இணையதளத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.

சிறுகதைகள்

வெளி இணைப்புகள்