ஹென்ரி அலெக்சன்டர் விக்ஹம்

From Tamil Wiki
Revision as of 14:23, 31 December 2022 by Parimitaa KM (talk | contribs) (Created page with "thumb|நன்றி: Libraryblogs ஹென்ரி அலெக்சன்டர் விக்ஹம் (மே 29, 1846 – செப்டம்பர் 27, 1928) ஒர் ஆய்வுப்பயணி மற்றும் எழுத்தாளர். ஹென்ரி நவீன உலகளாவிய ரப்பர் தொழிலின் தந்தை எனக் குறிப்பிடப்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நன்றி: Libraryblogs

ஹென்ரி அலெக்சன்டர் விக்ஹம் (மே 29, 1846 – செப்டம்பர் 27, 1928) ஒர் ஆய்வுப்பயணி மற்றும் எழுத்தாளர். ஹென்ரி நவீன உலகளாவிய ரப்பர் தொழிலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

விக்ஹம் வடக்கு லண்டன், ஹெம்ஸ்தெடில் (Hampstead) பிறந்தார். விக்ஹம் குடும்பத்தின் மூத்த மகன். விக்ஹமின் தந்தை ஒரு வழக்கறிஞர். விக்ஹமிற்கு நான்கு வயதிருக்கும்போது அவரது தந்தை லண்டன் காலரா தொற்றால் மரணித்தார்.

நன்றி: historyofceylontea

தொழில், திருமணம்

விக்ஹம் தனது தொழிலாக ஆய்வுப்பயணங்களை மேற்கொண்டார்.  விக்ஹம் தனது இருபதாம் வயதில் நிகாராகுவா, லத்தின் அமேரிக்கா, தெற்கு அமேரிக்காவிற்கு பயணித்தார். பிரிட்டிஷ் பெண்களின் தொப்பிகளுக்காகப் பறவைகளின் இறகுகளைச் சேகரிக்க ஒன்பது மாதங்கள் செலவிட்டார். 1868ல்  விக்ஹம் ஓரினோகோ டெல்தாவில் (Orinoco Delta) பயணங்களை மேற்கொண்டார். அங்கிருந்த காட்டு ரப்பர் மரங்களைச் சீவியபடியே பயணங்களைத் தொடர்ந்தார். விக்ஹம் நெக்ரோ ஆற்றைக் கடந்து மானாசோஸ்சை (Manaos) அடைந்தார். மனாசோஸ் ஆறு அமேசான் நதியுடன் சங்கமிக்கும். விக்ஹம் அமசோனைப் பின்தொடர்ந்து பாராவுக்குச் (Pará) சென்றார். பாராவிலிருந்து தாயகமான இங்கிலாந்து சென்றார். விக்ஹமின் அடுத்த பயணம் தபாஜோஸ் (Tapajos) ஆறும் அமேசான் நதியும் சங்கமிக்கும் சந்தாரமாக (Santarem) இருந்தது.

விக்ஹம் 1871ல் வயலட் கார்டர் என்பவரை மணமுடித்தார். விக்ஹம் குடும்பத்துடன் சந்தாரேம், பிரெசிலுக்கு 1873 மாற்றலாகினார். விக்ஹம் ஆய்வு பயணங்களில் பயணக்கட்டுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1872ல் விக்ஹமின் மாமனார் கார்டர்   (W.H.J. Carter), பிரசுரித்தார். கார்டர் புத்தக்ககடை உரிமையாளர், நூலகர். கார்டர் விக்ஹமின் அனைத்து பயணங்களுக்கும் நிதியுதவி அளித்துள்ளார். 1876ல் அமேசோனிய பருவநிலையால் விக்ஹமின் தாயார், தங்கை ஹரியட், தம்பி மாமியார், பதினான்கு வயது வேலைக்கார சிறுமி ஜேன் ஃபெரேட், வேலைக்காரர் ஜோர்ச் மோர்லி மரணித்தனர்.

ரப்பர் விதைகள் கடத்தல்

1873ல் விக்ஹம் ரப்பர் விதைகளைப் [Hevea Brasilinisis] பெற, அமேசனுக்கான நுழைவுத் துறைமுகமான பாராவில் உள்ள பிரிடிஷ் தூதரிடம் உதவி கேட்டார். கியூ அரச தாவரவியல் தோட்டத்திற்கு  ரப்பர் விதைகள் வந்து சேர்ந்தது. அதில், பன்னிரெண்டு ரப்பர் விதைகள் முளைத்து உடனே இறந்தன. விக்ஹம் 1876ல் பிரெசிலில் ஆய்வுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் போது ஒரு வருட காலம் Hevea Brasiliensis எனும் ரப்பர் விதைகளை ஆய்வு செய்து சேகரித்துள்ளார். அப்போது, உலகளாவிய ரப்பர் ஏற்றுமதியை பிரெசில் தன்னுரிமையக்கிக் கொண்டிருந்தது. அதனால், ரப்பர் விதைகளை ஏற்றுமதி செய்வதற்கன ஏற்றுமதிச் சட்டங்களில் தடைகள் இருந்தன. பிரெசிலின் அசல் ரப்பர் விதைகளை சாந்தாரம் பிரெசிலிருந்து (Santarém, Brazil) கியூ அரசு தாவரவியல் தோட்டத்திற்குக் கடத்த முயற்சிகளை மேற்கொண்டார். 70,000 ரப்பர் விதைகளை “ஆய்வு மாதிரிகள்” (Academic Specimens) என்ற பெயரில் பிரிட்டனுக்குக் கப்பலேற்றினார். ஆய்வு மாதிரிகள் என்பவைப் பிரெசிலின் அன்றைய ஏற்றுமதி சட்டங்களின்படி இறந்த விலங்கு அல்லது தாவரங்களாகும். ஜூன் 15, 1876ல் எழுபதாயிரம் ரப்பர் விதைகள் கியூ அரசு தாவரவியல் தோட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. பின்னர் இந்த விதைகளை பிரிட்டிஷ் சீலோன் (இலங்கை), பிரிட்டிஷ் மலாயா, சிங்கப்பூர், ஆப்ரிக்கா, இந்தியா, பதாவியாவிற்கு (ஜகார்த்தா, இந்தோநேசியா) கியூ விநியோகித்து நடச்செய்தது.

கடத்தல் நடந்து முப்பது வருடங்கள் கழித்து 1908ல் விக்ஹம் தான் எழுபதாயிரம் ரப்பர் விதைகளை 1876ல் சந்தாரம், பிரெசிலிருந்து திருடியதாக ஒப்புக்கொள்கிறார். அந்த நேரத்தில் விதைகளை ஏற்றுமதி செய்ய சட்டங்கள் இல்லை என்றார். தான் தவறான முறையில் ஏற்றுமதி உரிமையைப் பெற்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

கிழக்கில் ரப்பர் விதைகள்

1876ல் விக்ஹாம் பிரெசிலிருந்து 70,000 ரப்பர் விதைகளைக் கியூ தாவரவியல் தோட்டத்திற்குக் கப்பலேற்றினார். எழுபதாயிரம் விதைகளில் துளிர்விட்ட 2397 விதைகளில் 1700 விதைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. 1800ல் இலங்கையில் ஹெனெராட்கொடா தோட்டத்தில் முன்னூறு விதைகளே உயிருடன் இருந்தன. அதே சமயம் சிங்கப்பூருக்கு அனுப்பியிருந்த ஐம்பது விதை மடிந்திருந்தன. செப்டம்பர் 1876ல் புதிய நூறு விதைகளை இலங்கைக்கு அனுப்பினார். ஆனால், கியூ அரசு தாவரவியல் தோட்டத்திற்கு விக்ஹமின் விதைகள் பற்றாக்குறையாக இருந்ததென கருதியது. அதனால், ரோபட் கிரோஸ் என்பவரை அமேசோனுக்கு அனுப்பி விதைகளை அனுப்ப கியூ கட்டளையிட்டிருந்தது.

1877ல் கியூ தென்கிழக்காசியாவில் மூவாயிரம் விதைகளை விநியோகம் செய்திருந்தது. 1877ல் இலங்கையிலிருந்து இருபத்திரண்டு ரப்பர் விதைகள் வெற்றிகரமாக சிங்கப்பூரை வந்து சேர்ந்தன. மலேசியாவில் நட்ட ரப்பர் மரங்களில் 75% இந்த இருபத்திரண்டு விதைகளைக்கொண்டு நட்ட [மலேசியாவின் ரப்பர் மரங்களின்] ஒட்டு நாற்றுகளென [ஹென்ரி ரிட்லி] பின்னர் அறிவிக்கிறார்.

தேசிய கண்காட்சி, கோலாலும்பூர் (நன்றி: britishmalaya.home)

முக்கியத்துவம்

விக்ஹம் பிரெசிலிருந்து கொண்டு வந்த ரப்பர் விதைகளை வெற்றிகரமாக தென்கிழக்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, மலாயா, சிங்கையில் விநியோகித்தார். இதனால் தென் கிழக்காசிய நாடுகளில் ரப்பர் தோட்டங்கள் வளர்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்கிழக்காசிய நாடுகளின் ரப்பர் ஏற்றுமதி அமேசோன் பிரெசிலின் ரப்பர் தனியுரிமையை (monopoly) முறியடித்து நிறுத்தியது. இதற்கான காரணம், பெருவிலும், பிரெசிலிலும் ரப்பர் மரங்கள் காட்டு மரங்களாக இருந்தன. தென்கிழக்காசிய நாடுகளில் ரப்பர் மரங்கள் வணிக நோக்கத்திற்கு உகந்த முறையில் நடவு செய்யப்பட்டது.  உலகளாவிய பொருளாதார வரலாற்றில் தென்கிழக்காசிய நாடுகளையும் மலேசியாவையும் நிறுவியதின் முக்கிய காரணங்களில் ஒருவராகிறார். விக்ஹம் ஹென்ரி நிக்கோலஸ் ரிட்லியின் மூன்னோடி.

விமர்சனங்கள்

வரலாற்றாசிரியரான வாரன் டீன் (Warren Dean) விக்ஹம் “பிரெசிலின் உள்ளூர் ஆட்களின் தயவில்லாமல் பட்டப்பகலில் ஒரு பிரிட்டிஷ்காரர் கடத்தல் செய்திருக்க முடியாது. விக்ஹம் ரப்பர் விதைகளைப் பெற்றுக்கொண்ட பிரெசிலின் கையுறை நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்றுள்ளார்” எனக் குறிப்பிடுகிறார்.

பெருவில் இருக்கும் Ayapua Boat பொருட்காட்சியகம் (Museo Barco Historicos) விக்ஹமின் செயலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் அல்லது வரலாற்றிலேயே மிகப் பெரிய 'உயிர்மைக்கடத்தல்' ("the greatest act of biopiracy in the 19th century, and maybe in history") எனக் குறிப்பிடுகிறது. அதோடு, விக்ஹமின் கடத்தலுக்கு கியூ அரசு தாவரவியல் தோட்டம் பணம் வழங்கியதென்றும் குறிப்பிட்டது.

படைப்புகள்

Rough Notes of a Journey Through The Wilderness from Trinidad to Pará, Brazil,by way of the Great Cateracts of the Orinoco, Atabapo Rio Negro (1872)

தனி திறமை

விக்ஹம் இயற்கை நிலப்பரப்பு காட்சிகளைப் படமாக வரைவார். தனது ஓவியங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

மரணம்

விக்ஹம் செப்டம்பர் 27, 1928ல் பெடிங்டன், இங்கிலாந்தில் தனது 82ஆம் வயதில் மரணித்தார்.

உசாத்துணை

The British rubbermen in Malaya – Sir Henry Wickham and Sir Henry Nicholas Ridley

Bio-Pirate! Henry Wickham’s Audacious Brazilian Rubber Removal

HENRY WICKHAM

Sir Hendry Alexander Wickham