under review

ஹிதகாரிணி

From Tamil Wiki
Revision as of 07:29, 18 October 2022 by Meenambigai (talk | contribs) (Spell Check done)

To read the article in English: Hithakarini. ‎

விசாலாட்சியம்மாள்

ஹிதகாரிணி (1909-1915) தமிழில் வெளிவந்த தொடக்க கால இதழ். பெண் இதழாசிரியர் பணியாற்றிய முதல் இதழ். பண்டிதை விசாலாட்சி அம்மாள் இதன் ஆசிரியராக இருந்தார்.

வரலாறு

நாவலாசிரியை விசாலாட்சி அம்மாள் லோகோபகாரி இதழில் துணை ஆசிரியராக இருந்தார். அதன் ஆசிரியராக இருந்த நடராஜ ஐயர் மறைந்தபின் ஆசிரியரான வைத்யநாத ஐயர் என்பருடன் ஓராண்டுக்குள் விசாலாட்சி அம்மாளுக்கு கருத்து வேறுபாடு உருவானது. ஆகவே இதழில் இருந்து விலகி 1909-ல் ஹிதகாரிணி என்னும் இதழை சொந்தமாக தொடங்கினார். பின்னர் ஹிதகாரிணி அச்சகத்தில் இருந்து ஆன்மிகச் செய்திகளுக்காக ஞானசந்திரிகா என்னும் இதழையும் தொடங்கி நடத்தினார். 1915 வரை ஹிதகாரிணி வெளிவந்தது.

உசாத்துணை


✅Finalised Page