ஹாரியட் வின்ஸ்லோ

From Tamil Wiki
Revision as of 22:47, 26 August 2022 by Jeyamohan (talk | contribs)
ஹரியட் வின்ஸ்லோ

ஹாரியட் வின்ஸ்லோ. HARRIET WINSLOW (1796-1833) கிறிஸ்தவ மதப்பரப்புநர். கல்வியாளர். இலங்கையில் பெண்கல்விக்காக உழைத்தவர். உடுவில் பெண்பள்ளிக்கூடத்தை அமைத்து நடத்தினார். புகழ்பெற்ற மதப்பரப்புநரும் அகராதியியல் அறிஞருமான மிரன் வின்ஸ்லோவின் மனைவி

பிறப்பு, கல்வி

ஹாரியட் அமெரிக்காவில் கனெக்டிகெட் மாநிலத்தில் நார்விச் நகரில் சார்ல்ஸ் லாத்ரோப் (Charles Lathrop) ஜோன்னா லாத்ரோப் (Joanna Lathrop) இணையருக்கு 9 ஏப்ரல் 1796 ல் பிறந்தார். இல்லத்திலும் பின்னர் திருச்சபையிலும் இறையியல் கற்றார். அவருடைய மூன்று சகோதரிகளும் அவரைப்போலவே கிறிஸ்தவ மதப்பணியில் ஈடுபட்டனர்.

தனிவாழ்க்கை

ஹாரியட் தன் பதிமூன்று வயதில் முழுநேர மதப்பணியாளராக பொறுப்பேற்ற ஹாரியட் தன் இருபத்து மூன்றுவதில், 19 ஜனவரி 1819 ல், மிரன் வின்ஸ்லோ வை மணந்தார். அவருக்கு ஆறு பிள்ளைகள் இருந்தனர். சார்ல்ஸ் லாத்ரோப் வின்ஸ்லோ, ஹாரியட் மரியா வின்ஸ்லோ, ஜோஹன்னா வின்ஸ்லோ, ஜார்ஜ் மாட்டன் வின்ஸ்லோ, ஹாரியட் லாத்ரோப் வின்ஸ்லோ, எலிசா காய்ட் வின்ஸ்லோ. ஹாரியட் மதப்பணியில் ஈடுபட்டவர், இலங்கையில் பெண்கல்விக்காக உழைத்தவர்.

மதப்பணி

கணவருடன் இலங்கைக்கு வந்த ஹாரியட் பதிமூன்று ஆண்டுகள் மதப்பணியும் கல்விப்பணியும் ஆற்றினார். உடுவில் பெண்கள் பள்ளிக்கூடத்தை தொடங்கி நடத்தினார்.

மறைவு

14 ஜனவரி 1833ல் ஹாரியட் மறைந்தார்.

உசாத்துணை

https://librarycompany.org/women/portraits_religion/winslow.htm