under review

ஹாரியட் வின்ஸ்லோ: Difference between revisions

From Tamil Wiki
(Category:கல்வியாளர்கள் சேர்க்கப்பட்டது)
(Category:கிறிஸ்தவம் சேர்க்கப்பட்டது)
Line 23: Line 23:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கல்வியாளர்கள்]]
[[Category:கல்வியாளர்கள்]]
[[Category:கிறிஸ்தவம்]]

Revision as of 20:11, 23 December 2022

ஹரியட் வின்ஸ்லோ
ஹாரியட்

ஹாரியட் வின்ஸ்லோ. HARRIET WINSLOW (1796-1833) கிறிஸ்தவ மதப்பரப்புநர். கல்வியாளர். இலங்கையில் பெண்கல்விக்காக உழைத்தவர். உடுவில் பெண்பள்ளிக்கூடத்தை அமைத்து நடத்தினார். புகழ்பெற்ற மதப்பரப்புநரும் அகராதியியல் அறிஞருமான மிரன் வின்ஸ்லோவின் மனைவி.

பிறப்பு, கல்வி

ஹாரியட் அமெரிக்காவில் கனெக்டிகெட் மாநிலத்தில் நார்விச் நகரில் சார்ல்ஸ் லாத்ரோப் (Charles Lathrop) ஜோன்னா லாத்ரோப் (Joanna Lathrop) இணையருக்கு 9 ஏப்ரல் 1796 ல் பிறந்தார். இல்லத்திலும் பின்னர் திருச்சபையிலும் இறையியல் கற்றார். அவருடைய மூன்று சகோதரிகளும் அவரைப்போலவே கிறிஸ்தவ மதப்பணியில் ஈடுபட்டனர்.

தனிவாழ்க்கை

ஹாரியட் தன் பதிமூன்று வயதில் முழுநேர மதப்பணியாளராக பொறுப்பேற்ற ஹாரியட் தன் இருபத்து மூன்று வயதில், 19 ஜனவரி 1819 ல், மிரன் வின்ஸ்லோவை மணந்தார். அவருக்கு ஆறு பிள்ளைகள் இருந்தனர். சார்ல்ஸ் லாத்ரோப் வின்ஸ்லோ, ஹாரியட் மரியா வின்ஸ்லோ, ஜோஹன்னா வின்ஸ்லோ, ஜார்ஜ் மாட்டன் வின்ஸ்லோ, ஹாரியட் லாத்ரோப் வின்ஸ்லோ, எலிசா காய்ட் வின்ஸ்லோ. ஹாரியட் மதப்பணியில் ஈடுபட்டவர், இலங்கையில் பெண்கல்விக்காக உழைத்தவர்.

மதப்பணி

கணவருடன் இலங்கைக்கு வந்த ஹாரியட் பதிமூன்று ஆண்டுகள் மதப்பணியும் கல்விப்பணியும் ஆற்றினார். ஹாரியட் மதப்பணியில் கொண்டிருந்த உறுதியை வின்ஸ்லோ எழுதிய நினைவுக்குறிப்புகளில் விரிவாக பதிவுசெய்துள்ளார்.

கல்விப்பணி

ஹாரியட் பெண்களின் கல்விக்காக உழைத்தார். 1824-ல் ஹாரியட் வின்ஸ்லோவால் உடுவில்லில் துவங்கப்பட்டபெண்பள்ளி ஆசியாவிலே பெண்களுக்கான முதல் விடுதிப்பள்ளியாகும். உள்ளூர் எதிர்ப்புகளை தவிர்க்க தொடக்கத்தில் பெண்களுக்கு திருமணத்தின்போது வரதட்சிணை வழங்குவது, ஆடைகள் வழங்குவது என சில சலுகைகளை அளித்தனர்.

ஹாரியட் மறைவுக்குப் பின்னர் திருமதி ஸ்போல்டிங் அம்மையாரால் இப்பள்ளி நடத்தப்பட்டது.

மறைவு

14 ஜனவரி 1833ல் ஹாரியட் மறைந்தார்.

நினைவு

ஹாரியட் மறைந்தபின் அவர் கணவர் வின்ஸ்லோ அவரைப்பற்றிய நினைவுகளை, அவர் எழுதிய கடிதங்களுடன் வெளியிட்டார்

உசாத்துணை


✅Finalised Page